திகன  பிரதேசத்திலுள்ள வீடொன்றிற்கு அருகில் இன்று  காலை பெண்ணொருவர் தீ வைத்து எரித்து கொல்லப்பட்டுள்ளார். 

மேலும், சம்பவத்தில் 35 வயதான ஒருவரே பலியாகியுள்ளதாகவும்  இந்த கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் இதுவரை கைதுசெய்யப்படவில்லை என்பதோடு, தெல்தெனிய பொலிஸார் இது குறித்த மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.