சவுதியில் பெண்கள் அபாயா அணியத் தேவையில்லை என, அந்நாட்டின் மூத்த இஸ்லாமிய போதகர் தெரிவித்துள்ளார்.

அந்நாட்டின் இஸ்லாமிய அறிஞர் சபையின் சிரேஷ்ட உறுப்பினரான ஷேக் அப்துல்லா அல் முத்லாக் என்பவரே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

“முஸ்லிம் பெண்கள் அடக்க ஒடுக்கமாக ஆடை அணிவது அவசியமே! எனினும் அதற்காக அபாயா போன்ற, உடலை மூடும் வகையில் ஆடை அணியவேண்டிய கட்டாயம் இல்லை.

“முஸ்லிம் பெண்களில் 90 சதவீதமானவர்கள் அபாயா அணிவதில்லை. எனவே, இந்நாட்டின் பெண்கள் அபாய அணியவேண்டும் என்று நாம் கட்டாயப்படுத்தக்கூடாது.”

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

சவுதியில், இஸ்லாமியச் சட்டங்கள் நெகிழத் தொடங்கியிருக்கும் நிலையில், முதன்முறையாக இவ்வாறானதொரு கருத்தை முஸ்லிம் அறிஞர் முன்வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.