நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் கடந்த 12 வருடங்களுக்குப் பின்னர் அமைதியாக இடம்பெற்றுள்ளதாக தேர்தல்கள் கண்காணிப்பு அமைப்புகள் தெரிவித்துள்ளன . 

பாரிய குற்றச் செயல்கள் எவையும் இடம்பெறாது நடந்து முடிவடைந்துள்ள தேர்தல் எனவும் கண்காணிப்பு அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.

மக்கள் தேர்தல் சட்டங்களை மதித்து காலை வேளையில் அதிகளவில் தமது வாக்குகளை பதிவு செய்துள்ளனர் எனவும் கண்காணிப்பு குழுக்கள் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.