உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களுக்கான வாக்களிப்பு நிறைவை நோக்கை நகர்ந்து வருகிறது. வாக்காளர்கள் தீவிரமாக தமது ஜனநாயகக் கடமையை ஆற்ற வாக்குச் சாவடிகளில் வரிசைகளில் காத்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இன்று பிற்பகல் இரண்டு மணி வரையான ஏழு மணிநேர வாக்குப் பதிவில், கம்பஹாவில் 65%, களுத்துறை மற்றும் மாத்தறையில் 55%, மாத்தளை, ஹம்பாந்தோட்டை, திருகோணமலை மற்றும் குருணாகலையில் 65% மற்றும் புத்தளத்தில் 69% என வாக்குகள் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, அனுராதபுரம் மற்றும் இரத்தினபுரியில் 60%, அம்பாறை மற்றும் மொனராகலையில் 65% மற்றும் பொலனறுவையில் 63% வாக்குகள் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கண்டியில் 52%, பதுளையில் 65%, நுவரெலியவில் 60% மற்றும் காலியில் 67% என வாக்குகள் பதிவாகியுள்ளன.

தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் அறிய: உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள் 2018