உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் ஒருபுறம் அமைதியான முறையில் நடைபெற்று வந்தாலும் ஆங்காங்கே சில வன்முறைச் சம்பவங்கள், தேர்தல் விதிமுறை மீறல்கள் இடம்பெற்றிருப்பதாக அறிய முடிகிறது.

இன்று காலை 7 மணிக்கு வாக்களிப்பு ஆரம்பித்ததில் இருந்து இதுவரை 62 விதிமுறை மீறல் மற்றும் தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பப்ரல் அமைப்பின் நிர்வாக இயக்குனர் ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

இதேவேளை, வாக்காளர்களுக்கு போக்குவரத்து வசதி செய்து கொடுத்த, வாக்குச் சாவடிகளுக்கு அருகே பிரசுரங்களை வினியோகித்த மற்றும் தேர்தல் சுவரொட்டிகளை ஒட்டிய குற்றச்சாட்டுகளின் பேரில் நால்வரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.