லிபியாவில் உள்ள பள்ளி வாசல் மீது நேற்று இரவு நடத்தப்பட்ட இரட்டை வெடிகுண்டு தாக்குதலில் இருவர் பலியானதோடு 75 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந் நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

லிபியா நாட்டின் பெங்காஜி நகரில் அல்-மஜோரி பெர்கா மாவட்டத்தில் உள்ள பள்ளி வாசலில்  நேற்று தொழுகைக்காக பொதுமக்கள் கூடியிருந்த போது பள்ளி வாசலில் புதைக்கப்பட்ட இரட்டை வெடிகுண்டுகள் திடீரென வெடித்து சிதறியுள்ளது.

தகவலறிந்த மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு  விரைந்து, காயமடைந்தவர்களை மீட்டு வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இத் தாக்குதல் சம்பவத்திற்கு ஐக்கிய நாடுகள் சபை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

மேலும் இந்த இரட்டை வெடிகுண்டு தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.