போக்குவரத்து வசதிகளை வேட்பாளர்கள் செய்து கொடுப்பது தடை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

சில தேர்தல் தொகுதிகளில் இதுபோன்ற சம்பவங்கள் குறித்து முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதையடுத்தே இவ்வறிவித்தலை அவர் விடுத்துள்ளார்.

இதுபோன்ற செயற்பாடுகளில் ஈடுபடும் வேட்பாளர்களைக் கைது செய்யுமாறு, களத்தில் உள்ள பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.