உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், பிற்பகல் ஒரு மணி வரை அளிக்கப்பட்ட வாக்குகளின் சதவீதம் குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரிகள் தகவல் அளித்து வருகிறார்கள்.

அதன்படி, காலை ஏழு மணி முதல் பிற்பகல் ஒரு மணிவரையான, அதாவது, கடந்த ஆறு மணி நேரத்தில் புத்தளம் மற்றும் மாத்தறை மாவட்டங்களில் ஐம்பது சதவீதத்துக்கு மேலான வாக்குகள் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

இதேவேளை, அம்பாந்தோட்டை மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களில் 35 சதவீத வாக்குகளே பதிவாகியுள்ளதாகவும் தெரியவருகிறது.

வவுனியாவில் 45 சதவீத வாக்குகளும் பதுளையில் 40 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன.

தேர்தல் தொடர்பான செய்திகள் மற்றும் தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் அறிய: உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள் 2018