கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ளுராட்சிமன்றத் தேர்தல் வாக்குப்பதிவுகள் அமைதியான முறையில் இடம்பெற்று வருவதாக எமதுசெய்தியாளர் தெரிவித்தார்.

இதுவரை எவ்வித பாரிய அளவிலான அசம்பாவிதங்களும் இடம்பெறாதவாறு அமைதியான முறையில் தேர்தல் வாக்குப்பதிவு இடம்பெற்று வருகின்றது.

மக்கள் தமது வாக்குகளை அமைதியான முறையில் செலுத்தி வருகின்றனர். இது வரை கிளிநொச்சி மாவட்டத்தில் 25 வீதமான வக்குப்பதிவுகள் இடம்பெற்றுள்ளன.