மட்டக்களப்பு - கொக்கட்டிச்சோலை முனைக்காடு கிராமத்தில் வாகனமொன்று தீக்கரையாக்கப்பட்டுள்ள சம்பவம் நேற்று இரவு   இடம்பெற்றுள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்தனர்.

முனைக்காடு கிராமத்தில் தொலைத்தொடர்பு கோபுரமொன்று அமைக்கப்பட்டு வருகின்றது. இக் கோபுரம் அமைக்கும் பணியில் ஈடுபட்டுகின்றவர்களின் வாகனமே இவ்வாறு எரிந்துள்ளது.

குறித்த வாகனம் இனந்தெரியாதவர்களினால் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளதா அல்லது தானாக தீப்பற்றியுள்ளதா என தெரியாத நிலையில் கொக்கட்டிச்சோலை பொலிஸாரும் மட்டக்களப்பு குற்றத் தடவயவியல் பொலிஸாரும் ஸ்தலத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

தாம் நேற்று இரவு தூக்கத்தில் இருந்த வேளை ஏதோ பற்றி எரிகின்றதன்  வாசனை வீசியமையினால் வெளியில் சென்று பார்த்த போதே, தமது வாகனம் எரிந்து கொண்டிருந்ததாகவும் உடனடியாக நீர் ஊற்றி கட்டுப்படுத்தியதாகவும் தீயை கட்டுப்படுத்தியபோதிலும் வாகனத்தின் பொரும் பகுதி எரிந்துவிட்டதாகவும் வாகன உரிமையாளர்கள் தெரிவித்தனர்.