உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் இன்று (10) காலை 7 மணிக்கு ஆரம்பமாகி சுமுகமான முறையில் நடைபெற்று வருகின்றன.

தேர்தல் ஆரம்பமான முதல் மூன்று மணி நேரங்களுக்குள் கம்பஹா மாவட்டத்தில் 30 சதவீத வாக்குகளும் அம்பாறை மாவட்டத்தில் 25 சதவீத வாக்குகளும் அனுராதபுரம் மற்றும் மாத்தளை மாவட்டங்களில் தலா 20 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளதாக அவ்வந்த மாவட்ட தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, நுவர எலியவில் 20 சதவீத வாக்குப் பதிவும் பதுளையில் 40 சதவீதமும் மொனராகலையில் 25 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளன.

கண்டியில் 40 சதவீதம், யாழ்ப்பாணத்தில் 22 சதவீதம், கிளிநொச்சியில் 25 சதவீதம், திருகோணமலையில் 50 சதவீதம், புத்தளத்தில் 20 சதவீதம், மன்னாரில் 40 சதவீதம் மற்றும் முல்லைத்தீவில் 40 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

தேர்தல் தொடர்பான செய்திகள் மற்றும் தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் அறிய: உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள் 2018