பங்களாதேஷ் அணிக்கெதிரான 2 ஆவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 339 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நிர்ணயித்துள்ளது.

இந்நிலையில் வெற்றி இலங்கை நோக்கி துடுப்பெடுத்தாடி வரும் பங்களாதேஷ் அணி ஒரு விக்கெட்டை இழந்து 37 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

பங்களாதேஷுக்கு  கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி அவ்வணியுடன் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடிவருகின்றது.

இரு அணிகளுக்குமிடையில் சிட்டகொங்கில் இடம்பெற்ற முதல் டெஸ்ட் போட்டி வெற்றி தோல்வியின்றி நிறைவடைந்தது.

இந்நிலையில் இரு அணிகளுக்குமிடையிலான 2 ஆவது டெஸ்ட் போட்டி பங்களாதேஷின் டாக்காவில் ஆரம்பமானது.

இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய இலங்கை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 222 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

இந்நிலையில் பதிலுக்கு தனது முதலாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி சகல விக்கட்டுக்களையும் இழந்து 110 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

இலங்கை அணி சார்பில் பந்து வீச்சில் சுரங்க லக்மால் மற்றும் அகில தனஞ்சய ஆகியோர் தலா 3 விக்கட்டுக்களை வீழ்த்தியுள்ளனர்.

110 ஓட்டங்களால் முன்னிலை வகித்த இலங்கை அணி தனது 2 ஆவது இன்னிங்ஸை ஆரம்பித்துள்ளது.

இலங்கை அணி தனது 2 ஆவது இன்னிங்ஸில் இலங்கை அணி அனைத்துவிக்கெட்டுளையும் இழந்து 226 ஓட்டங்களைப்பெற்றது.

இதையடுத்த 339 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கு பங்களாதேஷ் அணிக்கு இலங்கை அணியால் நிர்ணயிக்கப்பட்டது.

இன்று போட்டியின் 3 ஆவது நாளில் 339 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடும் பங்களாதேஷ் அணி ஒரு விக்கெட்டை இழந்து 37 ஓட்டங்களைப்பெற்றுள்ளது.

இப் போட்டியில் இலங்கையா ? பங்களாதேஷா வெற்றி பெற்று தொடரைக்கைப்பற்றுமா அல்லது போட்டி வெற்றி தோல்வியின் முடிவடைந்து தொடரும் சமநிலையாகுமா என பெறுத்திருந்து பார்ப்போம்.