இலங்கை இரா­ணு­வத்­தினால் நடத்­தப்­படும் பாட­சா­லை­களை உட­ன­டி­யாக கல்வி அமைச்­சிடம் கைய­ளிக்க வேண்டும் என்று ஐ.நா குழு  வலி­யு­றுத்­தி­யுள்­ளது.

சிறுவர் உரி­மைகள் தொடர்­பான ஐ.நா. குழு, இலங்கை தொடர்­பான கண்­ட­றி­வுகள் குறித்து  நேற்­று­முன்­தினம் வெளி­யிட்­டுள்ள அறிக்­கை­யி­லேயே இவ்­வாறு கூறி­யுள்­ளது.

ஜெனி­வாவில் ஜன­வரி 15ஆம் திகதி தொடக்கம், பெப்­ர­வரி 02ஆம் திகதி வரை சிறுவர் உரி­மைகள் தொடர்­பான ஐ.நா குழுவின் கூட்டம் இடம்­பெற்­றி­ருந்­தது. இதில் இலங்கை, குவாட்­ட­மாலா, பனாமா, சிஷெல்ஸ், ஸ்பெய்ன், சொலமன் தீவுகள், பாலோ மற்றும் மார்ஷல் தீவு­களில் சிறு­வர்­களின் நிலை­மைகள் தொடர்­பாக ஆரா­யப்­பட்­டது.

இந்தக் கூட்­டத்தின் முடிவில் இலங்கை தொட­ர­்பாக வெளி­யி­டப்­பட்­டுள்ள அறிக்­கையில்,

“இலங்கை இரா­ணு­வத்­தினர் நடத்தும் பாட­சா­லை­களை கல்வி அமைச்­சிடம் கைய­ளிக்­கப்­ப­டு­வதை உறு­திப்­ப­டுத்த வேண்டும்.

கடெற் படை­ய­ணிக்­கான பயிற்­சியை இரா­ணுவ செயற்­பா­டு­க­ளுக்குள் உள்­ள­டக்கக் கூடாது. அனைத்­து­லக குற்­ற­வியல் நீதி­மன்றம்  தொடர்­பான, ரோம் உடன்­பாடு மற்றும் ஜெனிவா பிர­க­ட­னங்கள் தொடர்­பான மேலதிக நெறிமுறைகளை ஏற்றுக் கொள்வது குறித்து கவனத்தில் கொள்ள வேண்டும்” என்று வலியுறுத் தப்பட்டுள்ளது.