மூன்று கட்டங்களில் வாக்கெண்ணும் பணி

Published By: Priyatharshan

10 Feb, 2018 | 09:02 AM
image

340 உள்ளூராட்சிமன்றங்களுக்காக இன்று நடைபெறவுள்ள தேர்தல் பெறுபேறு முதற்கட்டமாக இரவு 7 மணியளவில் வெளிவரும் சாத்தியங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வாக்கெண்ணும் பணி 3 கட்டங்களாக இடம்பெறும் என தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

 உள்ளுராட்சி மன்றத்திற்குட்பட்ட ஒரு வட்டாரத்திற்கான வாக்குகள் வட்டார வாக்களிப்பு நிலையத்திலேயே எண்ணப்படும். பல வாக்களிப்பு நிலையங்கள் இருக்குமாயின் கணிசமாக வாக்குகள் உள்ள நிலையங்களுக்கு கொண்டுசெல்லப்பட்டு ஒரே இடத்தில்வைத்து எண்ணப்படும். இருப்பினும் வாக்குகள் வெவ்வேறாகவே எண்ணப்படும். இதற்கு முன்னர் நடைபெற்ற தேர்தலின் போது மாவட்டங்களில் அளிக்கப்பட்ட வாக்குகளின் பெட்டிகள் ஒரு இடத்திற்கு கொண்டுசெல்லப்பட்டு அங்கு கதவுகள் மூடப்பட்ட அறைக்குள் எண்ணப்படும். மறுநாள் காலையில் முடிவுகள் வெளிவந்தமை குறிப்பிடத்தக்கது.  இம்முறை அவ்வாறான நடைமுறை இடம்பெறமாட்டாது. 

இன்று நடைபெறும் தேர்தலில் வரலாற்றில் முதன்முறையாக அளிக்கப்பட்ட வாக்குகள் குறிப்பிட்ட உள்ளுராட்சி மன்றத்தில் வட்டார வாக்களிப்பு நிலையங்களிலேயே எண்ணப்படவுள்ளன. வாக்குகள் எண்ணும் பணி 3 கட்டங்களாக இடம்பெறும். முதலாவது கட்டத்தில் ஒவ்வொரு வாக்குப்பெட்டிகளிலுமுள்ள வாக்குகளின் எண்ணிக்கை கணக்கிடப்படும். இரண்டாம் கட்டத்தின் கீழ் அந்த வட்டாரத்திற்கு உட்பட்ட தபால் மூல வாக்குகள் எண்ணப்படும். இந்த தபால் மூல வாக்குகளின் எண்ணிக்கை 50இற்கு அதிகமாக இருந்தால் தனியாகவும் , 50க்கு குறைவாக இருப்பின் அவற்றை ஏனைய வாக்குகளுடன் கலந்து எண்ணப்படும்.

மூன்றாம் கட்டத்தின் கீழ் ஒவ்வொரு கட்சி அல்லது சுயேட்சை குழுக்களினால் பெற்ற வாக்குகள் வெவ்வேறாக எண்ணப்படும். வாக்குகள் எண்ணப்படும்போது சந்தேகம் தொடர்பாக ஏதேனும் கட்சி அல்லது சுயேட்சைக்குழுக்களின் முகவரினால் முன்வைக்கப்படும் கோரிக்கைக்கு அமைவாக வாக்குகள் எண்ணும் முகவரினால் வாக்குகள் மீள எண்ணப்படும் . இந்த கோரிக்கைகளுக்கு அமைவாக வாக்குகள் இரண்டு தடவை மாத்திரமே மீள எண்ணப்பட முடியும்  என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50