இன்று நடைபெறுகின்ற கிராம நிருவாக அதிகாரத்திற்கான வாக்களிப்பில் வாக்காளர்கள் அனைவரும் முடிந்தளவு நேரகாலத்துடன் வாக்குச் சாவடிகளுக்குச் சென்று வாக்களிக்குமாறு தேர்தல்கள்  ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய  கோரிக்கைவிடுத்துள்ளார்.

 

வாக்களிப்பு  இன்று சனிக்கிழமை காலை 7 மணிக்கு  ஆரம்பமாகியுள்ள நிலையில், வாக்களார்கள் அனைவரும் மாலை 4 மணி வரை வாக்களிக்க முடியும்.

 

இறுதி நேரம்வரையில் காத்திருக்காமல் நேரகாலத்துடன் வாக்களித்து  தேர்தல் நடவடிக்கைகளுக்கு உதவுமாறு ஆணைக்குழுவின் தலைவர் மேலும் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தேர்தல் முடிவுகள் தொடர்பில் மேலதிக விபரங்களுக்கு  உள்ளுராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள் - 2018

                                                                                                                             வாக்களிப்பு சற்றுமுன் ஆரம்பம் !