இளைஞர் ஒருவர் கடந்த 7 ஆம் திகதி புதன்கிழமை மாலை சுவிட்சர்லாந்தில் அடித்துக் கொலை செய்யப்பட்டார்.

றெபின்சன் றொட்ரிகோ துஸான் றொன்சின்ரன் (20) என்ற இளைஞரே இவ்வாறு கொலை செய்யப்பட்டவராவார்.

மூன்று வருடங்களாக சுவிட்ஸர்லாந்தில் வசித்து வந்த இவர், மர்ம நபர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

எனினும் இச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில், இலங்கையைச் சேர்ந்த 47 வயதுடைய நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கொலைக்கான காரணம், ஏனைய கொலையாளிகள் யார் என்பன குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.