இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவுக்கு நாட்டை விட்டு வெளியேற ஐக்கிய அரபு இராச்சியம் அனுமதி மறுத்துள்ளதாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சு மற்றும் சட்டம், ஒழுங்கு அமைச்சு ஆகியன கூட்டாகத் தெரிவித்துள்ளன.

சுதந்திர தினத்தன்று அமெரிக்கா செல்லத் திட்டமிட்டிருந்த உதயங்க, ஐக்கிய அரபு இராச்சியத்தில் இடைத்தங்கலுக்காக இறங்கியிருந்த வேளையில் அந்நாட்டு பொலிஸாரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார்.

விசாரணைகள் முடிந்த பிறகும் அவர் தடுத்து வைக்கப்பட்டதையடுத்து அவரை இலங்கைக்கு அழைத்துவருவது குறித்து அரசு யோசித்து வருகிறது.