களமிறங்கிய முதல் நான்கு போட்டிகளிலும் அரைச் சதம் அடித்த முதல் இலங்கை வீரர் என்ற சாதனையைப் படைத்திருக்கிறார் ரொஷேன் சில்வா!

பங்களாதேஷின் மிர்பூர் நகரில் இடம்பெற்று வரும் இலங்கை - பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் சற்று முன் நிறைவடைந்தது.

இன்றைய ஆட்டத்தை நான்கு விக்கட் இழப்புக்கு 56 ஓட்டங்கள் என்ற நிலையில் ஆரம்பித்த பங்களாதேஷ் அணி, எஞ்சியிருந்த ஆறு விக்கட்களையும் 54 ஓட்டங்களுக்கு இழந்தது. அந்த அணி மொத்தமாக 110 ஓட்டங்களையே பெற்றது.

இதையடுத்து, இரண்டாம் நாளே தனது இரண்டாவது இனிங்ஸை ஆரம்பித்த இலங்கை அணி, இரண்டாம் நாள் முடிவின்போது எட்டு விக்கட்களை இழந்து 200 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

இதில், அடுத்தடுத்த ஆட்டங்களில் அருமையாக ஆடிவரும் ரொஷேன் சில்வா தொடர்ச்சியாகத் தனது நான்காவது அரைச் சதத்தைப் பூர்த்தி செய்தார்.

நாளைய ஆட்டத்தில் விளையாட ரொஷேன் சில்வா 58 ஓட்டங்களுடனும் சுரங்க லக்மால் ஏழு ஓட்டங்களுடனும் தயாராக உள்ளனர்.