தீவுப்பகுதியிலுள்ள வாக்களிப்பு நிலையங்களுக்கான வாக்குப்பெட்டிகள் அனைத்தும் விமானப்படையினரின் உதவியுடன் மேற்கொள்ளப்படுவதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

நாளை நடைபெறவிருக்கும் உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான வாக்குப்பெட்டிகளை இன்று காலை அனுப்பிவைக்கும் பணிகள் ஆரம்பமாகின.

இதேவேளை இன்று மாலை அனைத்து வாக்களிப்பு மத்திய நிலையங்களுக்கும் அதிகாரிகள் சமுகமளித்தபின்னர், நாளை நடைபெறவுள்ள வாக்களிப்பிற்கான ஒத்திகை நடத்தப்படும் என்று தேர்தல்கள் மேலதிக ஆணையாளர் எம்.எம். மொஹமட் எமது தெரிவித்தார்.