அவுஸ்திரேலிய பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்களுக்கு கீழ் பணிபுரியும் பெண் ஊழியர்களுடன் பழகக்கூடாது என்ற சட்டத்தை கொண்டு வருவதற்கு பிரதமர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியா துணை பிரதமர் பார்நாபை ஜோயஸ் தனக்கு கீழ் பணிபுரிந்த பெண்ணுடன் பழகி வந்துள்ளார். இதனால் அந்த பெண் கர்ப்பமானார். இதனை ஜோயசின் மனைவி கடந்த வாரம் உறுதி செய்தார்.

பொது வாழ்க்கையில் ஈடுபடுபவர்கள் தவறு செய்யக்கூடாது. அதனால் பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்களுக்கு கீழ் பணிபுரியும் ஊழியர்களுடன் எவ்வித உறவும் வைத்துக்கொள்ள கூடாது என்ற புதிய சட்டத்தை இயற்ற வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர்கள் சார்பில் கோரிக்கை விடப்பட்டது. இந்த கோரிக்கைக்கு பிரதமர்  மால்கோம் டர்ன்புல் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.

இது குறித்து பேசிய அவுஸ்திரேலிய பிரதமர் மால்கோம் டர்ன்புல்,

'இருவருக்கும் இடையேயான உறவை நியாயப்படுத்த வேண்டும் என கூறுவது விரும்பத்தக்கது அல்ல' என கூறினார்.