சொஃப்ட்லொஜிக் ஹோல்டிங்ஸ் பிஎல்சியின் துணை நிறுவனமான சொஃப்ட்லொஜிக் புரொப்பர்டீஸ் (பிரைவட்) லிமிட்டெட், நகர குடியிருப்பாளர்களுக்கு சொகுசான மற்றும் சகாயமான குடியிருப்புகளை அறிமுகம் செய்துள்ளது.

கொழும்பு 04, டி பொன்சேகா வீதியில் சகல வசதிகளையும் படைத்த 25 சூழலுக்கு நட்பான குடியிருப்புகள் ஆறு மாடிகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இதில் ஒரு படுக்கையறை முதல் ஐந்து படுக்கையறை வரை அடங்கியுள்ளன.

இந்த தொடர்மனையினூடாக வசிப்போருக்கு, உயர் சௌகரியம் சேர்க்கப்படுகிறது. குறிப்பாக புகழ்பெற்ற வங்கிகள், சுப்பர்மார்க்கெட்கள், வைத்தியசாலைகள், உணவகங்கள், பொழுதுபோக்கு சேவைகள் மற்றும் விசேடமாக முன்னணி பாடசாலைகளான விசாகா, திருத்துவ கன்னியர் மடம், இசிபத்தன, சென். போல்ஸ், ஸ்ரீமாவோ, சென் பீற்றர்ஸ், ரோயல், தேர்ஸ்டன் போன்ற பாடசாலைகள் அனைத்தும் இரண்டு கிலோமீற்றர் தூரத்தினுள் அடங்கியிருக்கும்.

புகழ்பெற்ற சொஃப்ட்லொஜிக் வர்த்தக நாமத்தின் பின்புலத்துடன், துறைசார் நிபுணர்களின் பரந்த அனுபவம் மற்றும் தொடர்மனைகள் நிர்மாணத்தில் பாரிய அனுபவங்களுடன், எவரெஸ்ட் தொடர்மனை குறைந்த மாதாந்த சேவைக்கட்டணத்தை கொண்டுள்ளது. எவரெஸ்ட் தொடர்மனை நிர்மாண பொறுப்பை நாட்டின் முன்னணி உட்கட்டமைப்பு வடிவமைப்பு செயற்பாட்டாளர்களான சியெர்ரா கொன்ஸ்ட்ரக்ஷன் முன்னெடுக்கிறது. இது CIDA தரப்படுத்தப்பட்ட நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்மனையின் தோற்றம் மற்றும் அமைவிடம் ஆகியன முக்கியத்துவம் வாய்ந்தனவாக அமைந்துள்ளதுடன், சிங்கப்பூரில் பயிற்சி பெற்ற கட்டடக் கலைஞரால் இந்த கட்டடம் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இதன் காட்சி தோற்ற அமைப்பினால், வதிவாளர்களுக்கும் விருந்தினர்களுக்கும் நவீன, பிரத்தியேகமான மற்றும் சொகுசான வாழ்விட கட்டமைப்பை வழங்கியுள்ளது. இந்த அலகுகளின் தோற்ற அமைப்புகளை www.everest.lk இணையத்தளத்தில் பார்வையிட

முடியும்.

இதில் காணப்படும் கவனிக்கப்பட வேண்டிய சில அம்சங்களாக ஜேர்மனியின் Nolte, இத்தாலியின் Candy ஆகியன வர்த்தக நாமங்களிலமைந்த பான்ட்ரிகள் பொருத்தப்பட்டுள்ளதுடன், பனசொனிக் இன்வேர்டர் வகை வாயு சீராக்கிகள், மையப்படுத்தப்பட்ட எரிவாயு கட்டமைப்பு, Schindler நிலைக்குத்தான பாரமுயர்த்தி வசதி மற்றும் Cummings தரப்படுத்தப்பட்ட வலுப் பிறப்பாக்கல் போன்றன அடங்கியிருக்கும். அமெரிக்க தர ஃபிட்டிங்கள் மற்றும் ரொசெல் குளியலறை சாதனங்களும் உள்ளடக்கப்படும்.

தொடர்மனையினால் பாதுகாப்பு மற்றும் பிரத்தியேகத் தன்மை வழங்கப்படுவதுடன் ஒவ்வொரு வீடுகளுக்கும் பிரத்தியேகமாக கதவு video/audio (Panasonic) அணுகல், 24 மணி நேர CCTV கண்காணிப்பு, பாதுகாப்பான கார் தரிப்பிடம் போன்றன அடங்கியிருக்கும். இதில் பொது அம்சங்கள் அடங்கிய மொட்டைமாடி டெரஸ் அடங்கியிருக்கும் என்பதுடன், தோட்டப் பகுதியும் பராமரிக்கப்படும். திறந்த மற்றும் மூடிய நிகழ்வு பகுதிகளும் அடங்கியிருக்கும். இவற்றை உடற்பயிற்சி, ஓய்வெடுக்க, ஆன்மிக நடவடிக்கைகள் மற்றும் இதர செயற்பாடுகளுக்கு பயன்படுத்த முடியும்.

சொஃப்ட்லொஜிக் புரொப்பர்டீஸ் பிரைவட் லிமிட்டெட் பிரதம நிறைவேற்று அதிகாரியும் பணிப்பாளருமான கலாநிதி. ஸ்டீபன் அந்தோனிசிஸ் கருத்துத் தெரிவிக்கையில்,

“எவரெஸ்ட் தொடர்மனை குடியிருப்புகள் உண்மையில் நகர வாசிகளுக்கு முதல் தர வாழ்க்கை அனுபவத்தை வழங்குவதாக அமைந்திருக்கும். அதன் கொள்கை ரீதியான அமைவிடம் சொகுசான அம்சங்கள், கண்கவர் வடிவமைப்பு மற்றும் பராமரிப்புடனான காணியுடனான மொட்டை மாடி போன்றன சிறந்த முதலீட்டு தெரிவாக இதனை மாற்றியுள்ளது. கொழும்பு நகர சபை ஃ வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் 30 அடி வீதி இந்த தொடர்மனையை ஆர்.ஏ.டி.மெல் மாவத்தையுடன் இணைத்து அமைக்கப்படவுள்ளதால், எதிர்காலத்தில் மேலும் இலகுவாக தொடர்மனையை வந்தடைய முடியும்.” என்றார்.

“நாம் விற்பனை செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளதுடன், தொடர்மனையின் நிர்மாண நடவடிக்கைகள் இறுதிக்கட்டத்தை எய்தியுள்ளன. இவற்றை தற்போது பார்வையிடவும் முடியும். அலகுகளுக்கான கேள்வி அதிகமாக காணப்படுவதுடன் சதுர அடி ஒன்றின் விலை 230 – 240 அமெரிக்க டொலர்களாக அமைந்துள்ளன. இதுவரையில் 35 சதவீதமான குடியிருப்புகள் விற்பனையாகியுள்ளன. எமது விற்பனை அதிகாரி வொரெல் பிராங்க் 0779836898 எனும் தொலைபேசி இலக்கத்தினூடாக அல்லது 0777489856 ஊடாக தொடர்பு கொள்ளலாம்.

உங்களை சிக்கலில்லாத கொள்வனவு செயன்முறையில் உள்வாங்க செல்ல நாம் எதிர்பார்த்துள்ளோம். 2018 ஏப்ரல் முதலாம் திகதி முதல் தொடர்மனைகள் விற்பனையில் VAT/NBT வரி உள்ளடக்கப்படும் போது விலைகளில் சுமார் 17 சதவீத அதிகரிப்பை அவதானிக்கக்கூடியதாக இருக்கும். கொடுப்பனவுகளை இலகுபடுத்தும் வகையில் நாம் யூனியன் வங்கி மற்றும் நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி ஆகியவற்றுடன் கைகோர்த்துள்ளோம், இவற்றினூடாக வங்கிக் கடன் வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுக்கிறோம்” என்றார்.

சொஃப்ட்லொஜிக் ஹோல்டிங்ஸ் பிஎல்சியின் துணை நிறுவனமான சொஃப்ட்லொஜிக் புரொப்பர்டீஸ் பிரைவட் லிமிட்டெட், சொஃப்ட்லொஜிக் குழுமத்தின் லெய்ஷர் துறையின் செயற்பாடுகளை கையாள்கிறது. இதில் கொழும்பு Movenpick சிட்டி ஹோட்டல் அடங்கியுள்ளது. பெந்தோட்ட சென்டாரா சீசான்ட் ரிசோர்ட்ஸ் அன்ட் ஸ்பா ஹோட்டலும் அடங்கியுள்ளது. சொஃப்ட்லொஜிக் ஹோல்டிங்ஸ் பிஎல்சி இலங்கையின் முதல் தர பன்முகப்படுத்தப்பட்ட நிறுவனங்களில் ஒன்றாக திகழ்வதுடன் உள்ளக வளர்ச்சியுடன் தொடர்புடைய வகையில் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம், சுகாதாரத்துறை, விற்பனை, நிதிச்சேவைகள், வாகனங்கள் மற்றும் லெய்ஷர் போன்ற துறைகளில் பிரசன்னத்தைக் கொண்டுள்ளது. 8000 க்கும் அதிகமான தனிநபர்களுக்கு தொழில் வாய்ப்புகளை வழங்குவதுடன் 450மில்pயன் அமெரிக்க டொலர்களுக்கு அதிகமான புரள்வை கொண்டுள்ளது.