இன்றைய திகதியில் மாசடைந்த சுற்றுப்புற சூழலில் பணியாற்றுவதாலும், பணிப் பளுவின் காரணமாக ஏற்படும் மன உளைச்சல் மற்றும் மன அழுத்தத்தாலும் தலைமுடி உதிர்தல் என்பது இளவயதிலேயே நடைபெறுகிறது.

தலைமுடி உதிர்விற்கு ஏராளமான சிகிச்சைகள் இருந்தாலும் தற்போது P.R.P (Platalet Rich Plasma) ஊசி மூலமான சிகிச்சை பாதுகாப்பானதாக கருதப்படுகிறது.

இவ்வகையினதான சத்திர சிகிச்சையின் போது, எம்முடைய குருதியை எடுத்து, அதிலிருந்து எடுக்கப்படும் பிளாஸ்மாக்களை சிகிச்சைக்காகப் பயன்படுத்துவதால் பாதுகாப்பானதாக இருக்கிறது. அதே தருணத்தில் இவ்வகையினதான சத்திர சிகிச்சை அனைத்து வகையினதான சிகிச்சைகளுக்கும் தற்போது பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக முடி வளர்ச்சிக்கு இது அவசியமாகிறது. காம்ப்ளிகேசன் எதுவும் இல்லாததால் இதனை பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால்  ஒரு சில கொஸ்மெடீக் மற்றும் பிளாஸ்ரிக் சத்திர சிகிச்சை நிபுணர்கள் இது தான் சரியான தீர்வு என்று உறுதியாகச் சொல்வதில்லை. ஏனெனில் இதனால் ஏற்பட்ட பக்கவிளைவுகள் குறித்த ஆய்வு இன்றும் தொடர்கிறது.

டொக்டர் சிவக்குமார்

தொகுப்பு அனுஷா.