நடிகை சமந்தாவின் இடத்தை அறிமுக நடிகை ராஷ்மிகா மான்டேனா என்பவர் நிரப்புவார் என்று தெலுங்கு திரையுலகினர் தெரிவிக்கிறார்கள்.

நடிகை ராஷ்மிகா மான்டேனா, கர்நாடகாவில் பிறந்து வளர்ந்த இந்த மொடலிங் மங்கை, நடித்த முதல் கன்னட படமே சுப்பர் ஹிட். அதனால் உடனடியாக தெலுங்கு திரையுலகம் அவருக்கு வாய்ப்பளித்தது. அத்துடன் அவரின் தொழில்முறையிலான ஒத்துழைப்பால் மகிழ்ச்சியடைந்த அவர்கள் தொடர்ந்து மூன்று முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்கும் வாய்ப்பை வழங்கியிருக்கிறார்கள். அத்துடன் அவரின் அழகையும், திறமையையும் பார்த்து அடுத்த சமந்தா என்று புகழ்கிறார்கள். இதனால் சக நடிகைகள் அவர் மீது எரிச்சலில் இருக்கிறார்களாம். விரைவில் இந்த நடிகை தமிழிலும் அறிமுகமாகலாம் என்கிறார்கள் விடயமறிந்தவர்கள்.