மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கடற்கரைச்சேனை கிராமத்தில் உள்ள கோயிலில் திருமணம் செய்த சிறுவனையும் சிறுமியையும் பொலிஸார் கைது செய்த சம்பவம் மூதூரில் இடம்பெற்றுள்ளது.

செவ்வாய்க்கிழமை இவர்களை கைது செய்த பொலிஸார் மூதூர் நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய பாது சிறுமியை வைத்திய பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்குமாறும் குறித்த சிறுவனை ஒரு இலட்சம் ரூபா சரீரப் பிணையில் செல்வதற்கும் நீதிவான் ஜ.எம்.றிஸ்வான் உத்தரவு பிறப்பித்தார்.

திருமணம் செய்த சிறுவன் ஸ்ரீநிவாசபுரம் கிராமத்தைச் சேர்ந்த 14 வயதானவர் எனவும் சிறுமி மூதூர், கடற்கரைச் சேனை கிராமத்தைச் சேர்ந்த 14 வயதுடையவர் எனவும் தெரியவந்துள்ளது.

இவர்கள் இருவரும் கடந்த 2015.12.24 ஆம் திகதி திருமணம் செய்துள்ளனர். 

இவர்கள் திருமணம் செய்துள்ளதாக பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் கடந்த திங்கட்கிழமை இவர்களை பொலிஸார் கைது செய்தமை குறிப்பிடத்தக்கது.