பர்பசுவல் ட்சரீஸ் நிறுவனத்தின் தலைவர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் அந்நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேன ஆகியோருக்கு பிணை வழங்க கோட்டை நீதவான் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

சந்தேகநபர்கள் சார்பாக பிணை கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவிப்பு தெரிவித்து சட்டமா அதிபர் திணைக்களத்தால் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆட்சேபனை பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஆட்சேபனை பத்திர விடயங்களை ஆராய்ந்த கோட்டை நீதிமன்ற நீதவான் லங்கா ஜயரத்ன சந்தேகநபர்களுக்கு பிணை வழங்குவது தொடர்பான உத்தரவை எதிர்வரும் 16 ஆம் திகதி வழங்குவதாக உத்தரவிட்டுள்ளார்.