இலங்கை – இந்­திய – பங்­க­ளாதேஷ் ஆகிய அணிகள் மோத­வுள்ள சுதந்­திரக் கிண்ண முத்­த­ரப்பு கிரிக்கெட் தொட­ரினால் இலங்கைக் கிரிக்கெட் நிறு­வ­னத்­திற்கு ஆயிரம் மில்­லியன் ரூபா­வரை இலாபம் கிடைக்­கின்­றது என்று இலங்கைக் கிரிக்கெட் நிறு­வனத் தலைவர் திலங்க சும­தி­பால தெரி­வித்தார்.

அத்­தோடு இது­வ­ரையில் இலங்­கையில் நடை­பெற்ற தொடர்­க­ளி­லேயே அதிக இலா­பத்தை ஈட்­டிக்­கொ­டுக்கும் ஒரு தொட­ராக சுதந்­திரக் கிண்ணத் தொடர் அமைந்­துள்­ள­தா­கவும் அவர் குறிப்­பிட்டார்.

இலங்­கையின் 70ஆவது சுதந்­திர தினத்தை முன்­னிட்டு இலங்கை – இந்­தியா – பங்­க­ளாதேஷ் ஆகிய அணிகள் மோதும் முத்­த­ரப்பு இரு­ப­துக்கு 20 கிரிக்கெட் தொடர் கொழும்பு ஆர்.பிரே­ம­தாச கிரிக்கெட் அரங்கில் எதிர்­வரும் மார்ச் மாதம் 6ஆம் திகதி முதல் 18ஆம் திக­தி­வரை நடை­பெ­ற­வுள்­ளது.

சுதந்­திரக் கிண்ணம் என்று பெய­ரி­டப்­பட்டு விளை­யா­டப்­படும் இந்தத் தொடர் ஏற்­க­னவே கடந்த 1998ஆம் ஆண்டு இலங்­கையின் 50ஆவது சுதந்­திர தினத்தை முன்­னிட்டு விளை­யா­டப்­பட்டிருக்­கி­றது. 

அதன் தொடர்ச்­சி­யாக இம்­முறை 70ஆவது சுதந்­திர தினத்தை முன்­னிட்டு விளை­யா­டப்­ப­ட­வுள்­ளது.

இந்தத் தொடரின் மூலம் அதிக இலாபம் ஈட்­டிக்­கொள்ளும் நோக்­குடன் சர்­வ­தேச ரீதி­யி­லான விளை­யாட்டுப் போட்­டி­களை நடத்தும் முக­வர்­க­ளுடன் கைகோர்த்­துள்­ளது.

அந்­த­வ­கையில் சர்­வ­தேச ஒளி­ப­ரப்பு உரிமை, டிஜிட்டல் உரிமை மற்றும் விளம்­பர உரிமை என்­ப­வற்றில் அதிக இலாபம் ஈட்­டி­யுள்­ளதாம்.

இந்தத் தொடர் குறித்த ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்­பொன்று நேற்று கொழும்பு ஜெய்க் ஹில்­டனில் நடை­பெற்­றது.

இதில் பேசிய இலங்கைக் கிரிக்கெட் நிறு­வனத் தலைவர் திலங்க சும­தி­பால, இது­வ­ரையில் இலங்­கையில் நடை­பெற்ற தொடர்­க­ளி­லி­ருந்து சுதந்­திரக் கிண்ணத் தொடர் வேறு­பட்டுக் காணப்­படும்.

இலங்­கையில் இது­வ­ரையில் இப்­ப­டி­யொரு தொடர் நடந்­தி­ருக்க வாய்ப்­பில்லை என்­கின்ற அள­விற்கு நாம் தயா­ராகிக் கொண்­டி­ருக்­கிறோம். 

அத்­தோடு சர்­வ­தேச நிறு­வ­னங்­க­ளுடன் கைகோர்த்­துள்­ளதால் எமக்கு இந்தத் தொடரின் மூலம் 1000 மில்­லியன் ரூபா வரை இலாபம் கிடைத்­துள்­ள­தாகத் தெரி­வித்தார்.

இந்தத் தொட­ருக்­காக ஸ்பைடர் கெமரா, ட்ரோன் கெமரா உட்­பட அக்மண்ட் ரியா­லிட்டி தொழில்­நுட்­பத்தில் டிஜிட்டல் தளத்­திற்கு கிரிக்­கெட்டை எடுத்துச்செல்லவும் திட்டமிடப்பட்டிருக்கிறது. இந்த அக்மண்ட் ரியாலிட்டி தொழில்நுட்பம் கிரிக்கெட் ஊடாக இலங்கைக்கு அறிமுகப்படுத்தப்படுவது இதுவே முதன்முறை என்பது விசேட அம்சமாகும்.

சுதந்­திரக் கிண்ணத் தொட­ருக்­கான பிர­தான அனு­ச­ர­ணையை ஹீரோ மோட்டார் கோப் நிறு­வனம் வழங்­கு­கின்­ற­மையும் குறிப்­பி­டத்­தக்­கது.