ஐந்து மாண­வர்கள் உள்­ளிட்ட 11 பேர் கடத்தி காணாமல் ஆக்­கப்­பட்­டமை தொடர்பில், குற்றப் புல­னா­ய்வுப் பிரிவு விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்கும் நிலையில், கடத்­தப்­படும் போது 5 மாண­வர்­களும் பய­ணித்த கறுப்பு நிறக் கார் தொடர்பில் முக்­கிய தக­வல்கள் வெளிப்ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. குறித்த தக­வல்­களை மையப்­ப­டுத்தி விசா­ர­ணை­களை குற்றப் புல­னாய்வுப் பிரிவு தீவி­ரப்­ப­டுத்­தி­யுள்­ளது. அதன்­படி கறுப்பு நிற இன்­டிகோ ரகத்தை சேர்ந்த குறித்த கார்,  2008.09.17 ஆம் திகதி மாண­வர்­க­ளுடன் சேர்த்து கடத்­தப்­பட்ட பின்னர்,  சுமார் ஒரு வரு­ட­மாக கடற்­படை தலை­மை­ய­கத்தின் அதி பாது­காப்பு வல­ய­மான கடற்­படை தள­ப­தியின் வாகனம் தரித்து வைக்­கப்­படும் இடத்­துக்கு அருகில்   நிறுத்தி வைக்­கப்­பட்­டி­ருந்­தமை,  பின்னர் அது தர்­ம­தாஸ எனும் சந்­தேக நப­ராக கிரி உல்ல நகரில் வைத்து இரண்டாம் சந்­தேக நபர் ரண­சிங்­க­விடம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டமை  தொடர்பில்  சி.ஐ.டி.க்கு தகவல் கிடைத்­துள்­ளது.

 எவ்­வா­றா­யினும் கிடைக்கப் பெற்ற தக­வல்­களை மையப்­ப­டுத்தி விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ள­தாக குற்றப் புல­னாய்வுப் பிரிவின் சமூக கொள்ளை தொடர்­பி­லான விசா­ரணைப் பிரிவின் பொறுப்­ப­தி­காரி பொலிஸ் பரி­சோ­தகர் நிசாந்த சில்வா நேற்று   கோட்டை நீதிவான் லங்கா ஜய­ரத்­ன­வுக்கு அறி­வித்தார். 

அத்­துடன் இந்த விவ­கா­ரத்தில் கடத்தல், கப்பம் கோரல், காணாமல் அக­கப்­பட்ட்மை தொடர்பில் பூர­ண­மாக அறிந்­தி­ருந்த நிலையில் முன்னாள் கடற்­படை தள­பதி வசந்த கரன்­னா­கொட அதனை மூடி மறைத்­துள்­ள­தா­கவும், 2013 ஆம் திகதி 2 ஆம் சந்­தேக நபர் கொமாண்டர் ரண­சிங்க தனது சட்­டத்­த­ரணி ஊடாக குற்றப் புல­னாய்வுப் பிரி­வுக்கு வந்து இந்த விவ­கா­ரத்தில் இருந்து தன்னைக் காப்­பாற்ற கோரி­ய­தா­கவும் விஷேட விசா­ரணை அறிக்கை ஊடாக பொலிஸ்  பரி­சோ­தகர் கோட்டை நீதி­வா­னுக்கு அறி­வித்­துள்ளார்.

இந் நிலையில்  இந்த விவ­கா­ரத்தில் இது­வரை கைது செய்­யப்­பட்ட 9 பேரில் விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்ள காமினி, மெண்டிஸ் ஆகிய இரு முன்னாள் கடற்­படை புல­னாய்­வா­ளர்­க­ளையும் எதிர்­வரும் 22 ஆம் திகதி வரை விளக்­க­ம­றி­யலில் வைக்க உத்­த­ர­விட்ட  நீதிவான் அன்­றைய தினம் இது குறித்த வழக்கை விசா­ர­ணைக்கு எடுக்­க­வுள்ளார்.

முன்னாள் பொலிஸ் மா அதிபர் என்.கே.இலங்­க­கோனின் உத்­த­ர­வுக்கு அமை­வாக குற்றப் புல­னாய்வுப் பிரி­வுக்கு பொறுப்­பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ரவி சென­வி­ரட்­னவின் ஆலோ­ச­னைக்கு அமைய புல­னாய்வுப் பிரிவின் பணிப்­பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் நாக­ஹ­முல்­லவின் வழி­காட்­டலின் கீழ் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் சானி அபே­சே­க­ரவின் நேரடி  கட்­டுப்­பாட்டில் உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் திசேரா, புல­னாய்வு பிரிவின் கூட்டுக் கொள்ளை தொடர்­பி­லான விசா­ரணைப் பிரிவின் பொறுப்­ப­தி­காரி பொலிஸ் பரி­சோ­தகர் நிஸாந்த டீ சில்வா தலை­மையில் முன்­னெ­டுக்­கப்­படும் இரு­வேறு விசா­ர­ணை­களில் இந்த பிர­தான கடத்­தல்கள் தொடர்பில் தக­வல்கள் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தன.

கொழும்பு, கொட்­டாஞ்­சேனை, தெஹி­வளை, வத்­தளை மற்றும் கட்­டு­நா­யக்க உள்­ளிட்ட பல பிர­தே­சங்­களில் பல்­வேறு உத்­தி­களை கையாண்டு இந்த கடத்­தல்கள் அரங்­கேற்­றப்­பட்­டுள்­ளன. குறிப்­பாக தெஹி­வ­ளையில் 2008.09.17 அன்று பெர்­னாண்டோ மாவத்­தையில் உள்ள அலி ஹாஜியார் அன்வர் என்­ப­வ­ரது வீட்டில் வைத்து அவரும் ரஜீவ நாக­நாதன், பிரதீப் விஸ்­வ­நாதன், தில­கேஸ்­வரன் ராம­லிங்கம், மொஹம்மட் திலான், மொஹம்மட் சாஜித் ஆகிய ஐந்து மாண­வர்­களும் கடத்­தப்­பட்­டி­ருந்­தனர். இத­னை­விட கொட்­டாஞ்­சே­னையைச் சேர்ந்த கஸ்­தூரி ஆரச்­சி­லாகே ஜோன் ரீட், அரிப்பு பிர­தே­சத்தைச் சேர்ந்த அமலன் லியோன் மற்றும் ரொஷான் லியோன், கொட்­டாஞ்­சே­னையை சேர்ந்த அன்­டனி கஸ்­தூரி ஆராச்சி, திரு­கோ­ண­ம­லையை சேர்ந்த தியா­க­ராஜா கஜன் உள்­ளிட்­டோரும் கடத்­தப்­பட்­டி­ருந்­தனர். 

 இவ்­வாறு கடத்­தப்­பட்ட அனை­வரும் திரு­கோ­ண­மலை கடற்­படை தளத்தில் உள்ள இர­க­சிய வதை முகா­மான கன்சைட் எனும்  தடுப்பு முகாமில் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்­த­மையை குற்றப் புல­ன­ய­வா­ளர்கள் கண்­டு­பி­டித்­தனர். 

 சிறப்பு புல­னாய்வு பிரிவின் பொறுப்­பா­ள­ராக கட­மை­யாற்­றி­யி­ருந்த லெப்­டினன் கொமான்டர் சம்பத் முன­சிங்க, கன்சைட் நிலத்­தடி இர­க­சிய வதை முகாமின் பொறுப்­பா­ள­ராக அப்­போது இருந்த சுமித் ரண­சிங்க, கடற்­படை சிப்பாய் லக்ஷ்மன் உத­ய­கு­மார,  நலின் பிர­சன்ன விக்­ர­ம­சூ­ரிய, தம்­மிக தர்­ம­தாஸ , கித்­சிரி மற்றும் சிறப்பு புல­னாய்வு பிரிவின் பணிப்­பா­ள­ரா­கவும் கடற்­படை ஊடகப் பேச்­சா­ள­ரா­கவும் அப்­போது பதவி வகித்த கொமாண்டர் டி.கெ.பி. தஸ­நா­யக்க ஆகியோர் கைது செய்­யப்­பட்டு  பிணையில் உள்ள நிலையில் விளக்­க­ம­றி­யலில் உள்ள கடற்­படை புல­ன­யவுப் பிரிவின் முன்னாள் வீர­ரான கஸ்­தூ­ரிகே காமினி, அரு­ண­து­ஷார மெண்டிஸ் ஆகியோர் நேற்று சிறை அதி­கா­ரி­களால் மன்றில் ஆஜர்  செய்­யப்­பட்­டனர்.  

இதன்­போது மன்­றுக்கு விசா­ரணை  அறிக்­கையை தாக்கல் செய்த  பொலிஸ் பரி­சோ­தகர் நிசாந்த சில்வா, அவ்­வ­றிக்­கையில் தெரி­வித்­தி­ருந்­த­தா­வது

 கடந்த 2009.05.28 ஆம் திகதி முன்னாள் கடற்­படை தள­பதி வசந்த கரன்­னா­கொட கொழும்பு குற்­றத்­த­டுப்புப் பிரி­வுக்கு முறைப்­பா­ட­ளிக்கும் போது, இந்த 11 பேரின் கடத்தல், தடுத்து வைப்பு, காணாமல் ஆக்­கப்­பட்­டமை, கப்பம் கோரி­யமை தொடர்பில் பூர­ண­மாக அறிந்­தி­ருந்­துள்ளார். அத்­துடன்  லெப்­டினன் கொமாண்டர் சம்பத் முன­சிங்­க­வுக்கு எதி­ராக  முறைப்­பாடு செய்த போதும் அவ­ருடன் ஒன்­றாக ஒரே அறையில் தங்­கி­யி­ருந்த லெப்­டினன் கொமாண்டர் ஹெட்டி ஆரச்சி என்­ப­தையும் அறிந்­தி­ருந்தார். அத்­துடன் ஹெட்டி ஆரச்­சியை மேற்­பார்வை செய்­தவர் கொமாண்டர் டி.கெ.பி. தச­நா­யக்க என்­ப­தையும் அவர் அறிந்­தி­ருந்தார். எனினும் இவற்றை அவர் மூடி மறைத்தே முறைப்­பாட்டை செய்­துள்ளார்.

இத­னை­விட இந்த விவ­கா­ரத்தில் இரண்டாம் சந்­தேக நபர் கொமாண்டர் சுமித் ரண­சிங்க, கடந்த 2013 ஆம் அண்டி மாலை வேளை ஒன்ரில் தனது சட்­டத்­த­ர­ணி­யுடன் அப்­போது குற்றப் புல­னாய்வுப் பிரிவின் உதவி பொலிஸ் அத்­தி­யட்­சரும் தற்­போது சி.ஐ.டி. பணிப்­பா­ள­ரு­மான சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் ஷானி அபே­சே­க­ரவை சந்­திக்க வந்தார். அப்­போது  அவரால் புரி­யப்­பட்ட யுத்த பங்­க­ளிப்பு குறித்து விளக்­கப்­பட்ட நிலையில், பின்னர் இந்த கடத்­தல்­களை லெப்­டினன் கொமான்டர் சம்பத் முன­சிங்க செய்­த­தா­கவும் பின்னர் அவர் அவர்­களை தன்­னிடம் கைய­ளித்­த­தா­கவும், பின்னர் அவர்கள் காணாமல் ஆக்­கப்­பட்­ட­தா­கவும் கூறினார். எனினும் இதற்கு சம்பத் முன­சிங்­கவே பொறுப்புக் கூற வேண்டும் எனவும் தன்னை விடு­வித்து இந்த விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்­கு­மாறும் சட்­டத்­த­ரணி ஊடாக ரண­சிங்க பேச்­சு­வார்த்தை நடத்­தினார். 

இத­னை­விட கடத்­தப்­பட்ட மாண­வர்கள் பய­ணித்த ரஜீவ் நாக­நா­த­னுக்கு சொந்­தமான்  கார் தொடர்பில் முக்­கிய தக­வல்கள் கிடைத்­துள்­ளன. அதனை மையப்­ப­டுத்தி விசா­ரணை இடம்­பெ­று­கின்­றது.ரஜீவ் நாகநாதனுக்கு சொந்தமான்  கார் தொடர்பில் முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளன. அதனை மையப்படுத்தி விசாரணை இடம்பெறுகின்றது. என குறித்த விசாரணை அறிக்கையில் சுட்டிக்கடடப்பட்டிருந்தது.

 எவ்வாறாயினும் இந்த விசாரணைகளை குற்றப் புலனாய்வுப் பிரிவில் இருந்து வேறு ஒரு பிரிவுக்கு மாற்றுமாறு கோரும் சந்தேக நபர்கள் சார்பில் ஆஜராகும் சட்டத்தரணி அசித் சிரிவர்தன, அது தொடர்பில் நேற்று எழுத்து மூல வாதங்களை சமர்ப்பித்தார்.

 இந்நிலையில் அது குரித்த தீர்மானத்துக்காகவும் விளக்கமறியல் தொடர்பிலான் உத்தரவுக்காகவும் வழக்கு எதிர்வரும் 22 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.