நாளை நடைபெறும் தேர்தல் வாக்களிப்பு  காரணமாக நாட்டின் அனைத்து மதுபான  சாலைகளையும் மூடுமாறு தேசிய கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது. தேர்தல் நேரங்களில் குழப்பங்கள் ஏற்படுத்தாத வகையில் பொதுமக்கள் நடந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக அத்திணைக்களம் தெரிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில் நாளை உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இடம்பெறுகின்றது.  

பொது மக்கள் பாதுகாப்பு நடவடிக்கைகள் அனைத்தும் தயார்ப்படுத்தப்பட்டுள்ள நிலையில் நாட்டின் அனைத்து மதுபான கடைகள் தேர்தல் தினமான  நாளை   மூடப்படும் என்று கலால்  திணைக்களம் நேற்று அறிவித்துள்ளது. தேர்தல் வாக்குச் சாவடிகள், வாக்கெண்ணும் நிலையங்களின் பாதுகாப்பு கருத்தில் கொண்டும் மக்களின் பாதுகாப்பையும், மக்களின் ஈடுபாட்டை கருத்தில் கொண்டும் இந்த தீர்மானம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.