உதயங்க விடுதலை ! பேஸ்புக்கில் பதிவு 

Published By: Priyatharshan

08 Feb, 2018 | 07:20 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

மிக் விமான கொள்வனவு தொடர்பில் சந்தேக நபராக கருதி தேடப்பட்டு வரும் ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க, தான் விடுதலை செய்யப்பட்டதாக பேஸ்புக்கில் பதிவினை இட்டுள்ளார். 

எனினும் இது தொடர்பில் பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குனசேகரவை தொடர்புகொன்டு கேட்ட போது, அது தொடர்பில் உத்தியோகபூர்வமாக எந்த தகவலும் இதுவரை கிடைக்கவில்லை என்பதால் உறுதியாக கூற முடியாது என தெரிவித்தார். 

அத்துடன் 7 பேர் கொண்ட சிறப்புக் குழு அபுதாபி சென்றுள்ள நிலையில் அது தொடர்பில் தகவல் கிடைக்கும் வரை எதுவும் கூற முடியாது என அவர் சுட்டிக்காட்டினார்.

இது தொடர்பில் உதயங்க வீரதுங்க என அவரது புகைப்படத்துடன் கூடிய முகப்புத்தக கணக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கடந்த நான்காம் திகதி அமெரிக்கா நோக்கி செல்ல முற்பட்ட போது நான்  ஐக்கிய அரபு அமீரகத்தில் வைத்து அந் நாட்டின் இன்டர்போல் பொலிஸாரினால் தடுக்கப்பட்டேன். இதன்போது அவர்கள் என்னை தடுத்து விசாரணை செய்ததில் எனக்கு எதிராக எவ்வித சர்வதேச சிவப்பு அறிவித்தலும் இல்லை என்பதும் சர்வதேச குற்றச்சாட்டுக்கள் இல்லை என்பதும் உறுதியானது. அதன் பின்னர் அவர்கள் விடுதலை செய்தனர். எனக்கு எதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் பொய்யானவை.  என்னை தற்போதைய அரசாங்கம் அரசியல் ரீதியாக பழி வாங்குவதால், தற்போதைக்கு இலங்கை வரும் எண்ணம் எனக்கில்லை.

பொலிஸாரின் இந்த செயற்பாட்டுக்கு எதிராக நான் சர்வதேச நீதிமன்றில் நட்ட ஈடு கோரி வழக்குத் தாக்கல் செய்வேன். உள்ளூராட்சி மன்றத் தேர்தலை மையப்படுத்தியே என்னை கைதுசெய்ய முயல்கின்றனர் எனக் கருத்துப்பட்ட பதிவினை அவர் இட்டுள்ளார்.

எவ்வாறாயினும் குறித்த பதிவின் நம்பகத்தன்மை தொடர்பில் பொலிஸ் தலைமையகத்தில் எவரும் உறுதி செய்யவில்லை.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27