(லியோ நிரோஷ தர்ஷன்)

இலங்கைக்கும் - கொரியாவிற்கும் இடையிலான 40 ஆண்டுகால இராஜதந்திர உறவுகள் மேலும் வலுவாக பல்துறைகளை உள்வாங்கும் வகையில் முன்னெடுக்கப்படும். இரு நாட்டு ஒத்துழைப்புகளை மேலும் விரிவுப்படுத்துவதே தனது நோக்கம் என இலங்கைக்காக கொரிய தூதுவர் ஹீயோன் லீ தெரிவித்தார். 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த வருடம் கொரியாவிற்கு சென்றமையானது இரு நாட்டு தலைவர்களுக்குமிடையிலான புரிந்துணர்வு வலுவடைந்துள்ளது. 

இந்நிலையானது கொரிய முதலீட்டர்களின் ஆர்வம் இலங்கை பக்கம் திரும்புவதற்கும் காரணமாகியது எனவும் அவர் குறிப்பிட்டார். 

இலங்கைக்கான கொரிய தூதரகத்தில் புதன் கிழமை இடம்பெற்ற  விசேட ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே  தூதுவர் ஹீயோன் லீ மேற்கண்டவாறு தெரிவித்தார்.