உள்ளூராட்சிமன்றத் தேர்தல் வாக்களிப்பிற்காக ஆயிரத்து 337 இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான  பஸ்கள் பணிகளுக்கமர்த்தப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

நாளை மறுதினம் திங்கட்கிழமை நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் வாக்களிப்பில் பணிக்கமர்த்தப்பட்டுள்ள பஸ்கள் மூலம், தேர்தல் அதிகாரிகள் வாக்குப்பெட்டிகளை எடுத்துச்செல்வதற்கு பாதுகாப்புப் பணிகளுக்காக பயன்படுத்தப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.