அடையாளம் காணப்பட்ட பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் காலிதா ஸியாவுக்கு ஐந்து ஆண்டு கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, அவரது சிரேஷ்ட புதல்வர் தாரிக் ரஹ்மானுக்கு பத்தாண்டு கடூழிய சிறை விதிக்கப்பட்டது.

ஆதரவற்றோர் இல்லங்களுக்கு வழங்கப்பட்ட நிதியில் ஊழல் புரிந்ததாக, காலிதா ஸியா மற்றும் தாரிக் ரஹ்மான் உட்பட ஐந்து பேர் மீது வழக்குத் தொடுக்கப்பட்டிருந்தது.

இவ்வழக்கின் விசாரணைகள் நிறைவுற்ற நிலையில், இன்று (8) பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் உள்ள விசேட நீதிமன்றம் ஒன்றில் வழக்கின் தீர்ப்பு வாசிக்கப்பட்டது.

பங்களாதேஷின் பிரதான கட்சியும் எதிர்க்கட்சியுமான பங்களாதேஷ் தேசியக் கட்சியின் தலைவியான காலிதா ஸியா மற்றும் அவரது புதல்வருக்கு வழங்கப்பட்ட இத்தண்டனையானது, இவ்வாண்டு இறுதியில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் கடும் பாதிப்பை ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது.