தேசத்தின் தொலைபேசி தொடர்பாடல்துறையில் முன்னணி வகிக்கும் ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தின் (SLT) 160 வருடப் பூர்த்தியை முன்னிட்டு நாட்டிலுள்ள வசதி குறைந்த பாடசாலைகளில் அறிவூட்டல், தொழில்நுட்ப  பகிர்வுடன் ஆரோக்கியத்தைப் பேணுதல், சுற்றாடலை பாதுகாத்தல் ஆகியவற்றின் அவசியம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

1857ஆம் ஆண்டு முதல் இன்று வரை வரலாற்றைக் கொண்டு, கிராமங்களுக்கும் நகரங்களுக்கும் இடையிலும் தேசத்திற்கும் சர்வதேசத்திற்கும் இடையிலும் தொடர்புகளை ஏற்படுத்தி, இலங்கை மக்களின் வாழ்க்கை முறைக்கு உயிரூட்டி தேசிய தொடர்பாடல்துறைக்கான கடமையை ஆற்றிவரும் SLT நிறுவனம் சமூக நலனைக் கருத்தில்கொண்டு முடிவடைந்த 2017ஆம் ஆண்டு முழுவதும் ‘160 பாடசாலைகளில் அபிவிருத்தி திட்டங்கள்’ என்ற கருப்பொருளில் பல்வேறு விடயங்களை நிறைவேற்றியது.

நாட்டின் பல்வேறு பகுதிகளிலுள்ள 160 பாடசாலைகளைச் சேர்ந்த  மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் வலய கல்வி அதிகாரிகள் உட்பட சுமார் 12,000 பேர் இந்த செயற்திட்டத்தின் மூலம் பலன் பெற்றனர்.

இப் பாடசாலைகளில் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திக்கொடுத்ததன் ஊடாக எதிர்காலத்தில் நாட்டைப் பொறுப்பேற்க தயாராகும் புதிய தலைமுறையினருக்கு முறையான கல்வி வசதிகள் மற்றும் ஆய்வுக்கான சந்தர்ப்பங்களை வழங்குதல் போன்றன இங்கு இடம்பெற்றன.

தூரப் பிரதேசங்களில் உள்ள பிள்ளைகளின் எதிர்பார்ப்பான துரித ப்ரோண்ட்ப்ரேண்ட் தொடர்பாடல் ஊடாக தகவல் மற்றும் தொடர்பாடல்களின் அவசியத்தை நிறைவேற்றும் பொருட்டு LTE அல்லது ADSL  தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தொடர்புகளை இலவசமாக ஏற்படுத்திக்கொடுத்தல், 12 மாதங்களுக்கு ஆரம்பக் கட்டணமின்றி Internet பெக்கேஜ், இலவச Wi-Fi  போன்ற உட்கட்டமைப்பு வசதிகள் நிறைவேற்றப்பட்டன. இதனை விட கல்வி பொதுத் தராதர சாதாரண பாடங்களை அடிப்படையாகக் கொண்ட தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப விரிவுரையும் நடத்தப்பட்டது.

பாடசாலை நூலகங்களுக்கு புத்தகங்கள் விநியோகிக்கப்பட்டதுடன் மாணவர்களின் ஆங்கில அறிவை மேம்படுத்தும் பொருட்டும் வாசிப்புப் பழக்கத்தை அதிகரிக்கும் பொருட்டும் ஆங்கில மொழியில் தொகுக்கப்பட்ட புத்தகங்கள் வழங்கப்பட்டன.

பிள்ளைகளுக்கும் பெற்றொருக்கும் இடையில் நல்லுறவு நிலவுவதை உறுதிசெய்யும் வகையில் ‘சிசு கெனெக்ட்’ (மாணவர்களைத் தொடர்புபடுத்தல்) தொலைபேசி வசதியும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது.

தொற்றா நோய்கள் அதிகரித்தல், சமூகத்தில் நாளாந்தம் நோய்கள் ஏற்படுதல் போன்ற சூழ்நிலைகளில் அவற்றிலிருந்து விடுபட்டு நோயற்ற பிரஜைகளை நாட்டில் உருவாக்கும் நோக்கில் பாரம்பரிய அரிசி வகை, அவற்றில் உள்ள சத்துக்களின் பெறுமதி மற்றும் மருத்துவ குணாதிசயங்கள், பாரம்பரிய அரிசி பாவனையின் முக்கியத்துவம் என்பன பற்றி பாடசாலை மாணவர்களுக்கு விளக்கிக் கூறப்பட்டது. இது ‘நாளைய தினத்தை முன்னிட்டு உரிமையை காப்போம்’ என்ற SLTயின் நோக்கத்தை கட்டியெழுப்பும் ஒரு செயலாகும்.

சுற்றாடலைப் பாதுகாப்பது தொடர்பான அவசியத்தை மாணவர்கள் மத்தியில் உணர்த்தி, கடும் விஷத்தன்மையுடன்கூடிய மூலதிரவியத்தை உருவாக்கும் பாதரசம் சுற்றாடலில் கலப்பதைத் தடுக்கும் பொருட்டு CFL பல்ப் மற்றும் டியூப் லைட் ஆகியவற்றை மீள் உற்பத்தி செய்யும் SLT யின் செயற்திட்டம் தொடர்பான விளக்கங்கள் மாணவர்களுக்கு முக்கிய தகவல்களாக அமைந்தன.