காலி - போகஹாகொட பிரதேசத்தில் அமைந்துள்ள இறப்பர் தொழிற்சாலை வளாகத்தில் குவிக்கப்பட்டிருந்த இறப்பர் தொகையில் தீப்பரவல் ஏற்பட்டுள்ள நிலையில், தீ தொழிற்சாலை கட்டிடம் அமைந்துள்ள பகுதிக்கு அது பரவி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

தீயணைப்பு பிரிவினருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து தீயணைப்பு பிரிவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து பரவிக் கொண்டிருக்கும் தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த தீ விபத்து தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.