கல்யாணம் எப்போது? என்று கேட்ட கர்ப்பிணி யை கொலை செய்த கொடூரன்!!!

Published By: Digital Desk 7

08 Feb, 2018 | 12:45 PM
image

கல்யாணம் எப்போது? என்று அடிக்கடி விசாரித்த கர்ப்பிணி பெண்ணை வாலிபர் ஒருவர் ஈவு இரக்கமின்றி கொலை செய்த சம்பவம் இந்தோனேசியாவில் நடந்துள்ளது.

இந்தோனேசியாவின்  கம்பங் பாசிர் ஜோங் பகுதியில் வசித்து வரும் 28 வயதான வாலிபருக்கு  திருமணம் ஆகவில்லை. இவரிடம் பக்கத்து வீட்டில் வசித்த திருமணமான 32 வயதான  பெண் அடிக்கடி  ‘நீ ஏன் இன்னும் கல்யாணம் செய்யவில்லை? எப்போது கல்யாணம்? உன் வயது பையன்களுக்கு எல்லாம் கல்யாணம் ஆகிவிட்டது. நீயும் சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கொள்’ என்று அறிவுரை கூறியுள்ளார்.

இப்படி பலமுறை கூறி வெறுப்பேற்றியதால் அவமானம் தாங்காத வாலிபர் அந்த பெண் மீது ஆத்திரம் கொண்டு  கடந்த மாதம் 19ஆம் திகதி அந்த பெண்ணின் வீட்டிற்குச் சென்று அவரை கொலை செய்துள்ளார். 

கர்ப்பிணியாக இருந்த பெண்ணின்  கழுத்தை நெரித்து கொலை செய்த வாலிபர் அங்கிருந்த செல்போன் மற்றும் பணத்தை எடுத்துக்கொண்டு ஜகார்த்தாவுக்கு தப்பிச் சென்றுள்ளார்.

தகவலறிந்த பொலிஸார்  குறித்த வாலிபரை சுற்றி வளைத்து பிடிக்க முயற்சித்த போது தப்பிக்க முயன்றுள்ளார்.அதனால் பொலிஸார் அவரது காலில் துப்பாக்கியால் சுட்டு பின்னர் கைது செய்துள்ளனர்.

குறித்த வாலிபர் மீதான கொலைக் குற்றம் நிரூபிக்கப்பட்டால்  ஆயுள் தண்டனை வழங்கப்படும் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47