இவ்வார அமைச்சரவை முடிவுகளை அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித்த சேனாரத்ன இன்று அறிவித்தார்.

இவ்வார அமைச்சரவை முடிவுகள் வருமாறு,

இலங்கையில் 2016 ஆம் ஆண்டில் ஆசிய மற்றும் பசுபிக் பிராந்திய சிவில் விமானப் போக்குவரத்து இயக்குனர் நாயகங்களின் 53 ஆவது கூட்டத்தினை நடாத்துதல் (விடய இல 11)

சிவில் விமானப் போக்குவரத்திலுள்ள சர்வதேச விதிகள் மற்றும் நியமனங்கள் ஒழுங்கான மற்றும் தொடர்ச்சியான அடிப்படையின் மீது அதன் தனிப்பட்ட மற்றும் எல்லை ஊடான நாடுகளில் விமான போக்குவரத்தின் பாதுகாப்பு தற்பாதுகாப்பு ஒழுங்கமைப்பு மற்றும் பயன்மிக்க வகையில் அமுலாக்கப்பட்டு பின்பற்றப்படுகின்றது என்பதை உறுதிப்படுத்துவதற்கு பொதுவான மேடையில் ஒன்றாக வேலை செய்தல் என்னும் நோக்கத்துடன் ஆசிய மற்றும் பசுபிக் நாடுகளின் தேசிய விமான போக்குவரத்து ஒழுங்கமைப்பு அதிகார சபைகள் தலைமையேற்கின்ற சிவில் விமான போக்குவரத்து இயக்குனர் நாயகங்களின் கூட்டம் 1960 ஆம் ஆண்டிலிருந்து நடாத்தப்படுகின்றது. 

இலங்கை 1990 ஆம் ஆண்டில் 26 ஆவது சிவில் விமான போக்குவரத்து இயக்குனர் நாயகங்களின் கூட்டத்தினை நடாத்தி இருந்தது. கூட்டத்திற்கான கிரம அடிப்படையிலான உரிமையாக உள்ள 2016 ஆம் ஆண்டிற்கான 53 ஆவது கூட்டத்தை நடாத்தும் சந்தர்ப்பத்தை சர்வதேச விமான போக்குவரத்து ஸ்தாபனத்தின் ஆசிய பசுபிக் பிராந்திய அலுவலகம் இலங்கைக்கு வழங்கியிருக்கிறது. இதனடிப்படையில் “அனைத்து நாடுகளையும் ஒன்றினைத்து பிரதிபலிப்பு சிநேகித சூழலில் பாதுகாப்பான, உறுதியான, திறமைமிக்க விமான சேவை அமைப்பை வளர்த்தல்” எனும் தலைப்பில் 2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 01 திகதி முதல் 05 ஆம் திகதி வரை இலங்கையில் நடாத்துவதற்கு போக்குவரத்து மற்றும் சிவில் விமானச் சேவை அமைச்சர்  நிமல் சிறிபால டி சில்வா வினால்  முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.   

கைத்தொழில் பிணக்குகள் சட்டத்தின் கீழ் நியமிக்கப்பட்டுள்ள நடுத் தீர்ப்பாளர்கள் மற்றும் கைத்தொழில் நீதிமன்றத்தின் அங்கத்தவர்களுக்கான கொடுப்பனவிற்கான ஒழுங்கு விதிகளுக்கான திருத்தம்  (விடய இல. 12)

கைத்தொழில் பிணக்குகள் சட்டத்தின் கீழ் நியமிக்கப்பட்டுள்ள நடுத் தீர்ப்பாளர்கள் மற்றும் கைத்தொழில் நீதிமன்றத்தின் அங்கத்தவர்களுக்கான கொடுப்பனவிற்கான ஒழுங்கு விதிகளில் காணப்படும் குறைப்பாடுகளை கருத்திற் கொண்டு அது தொடர்பில் தற்போது நடைமுறையிலிருக்கும் 2008-03-28 ஆம் திகதிய 1542/35 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ள ஒழுங்கு விதிகளில் திருத்தம் செய்தற்கு தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சர் கௌரவ டபிள்யு. டி. ஜே. செனவிரத்னவினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. 

மின் - கல்வி கருத்திட்ட நடைமுறையாக்கம்  (விடய இல. 13)

இன்றைய உலகின் நடைமுறை போக்கில் சிறந்த அபிவிருத்தியினை காண முற்படும் ஒரு தேசத்தை பொறுத்த வரையில் கணனி அறிவென்பது கட்டாயமானதொன்றாகும். அத்தகைய ஒரு நிலைக்கு இலங்கையை கொண்டு செல்வதற்கே கணனி மற்றும் தகவல் தொழில்நுட்ப கல்வியானது அத்துறையில் சிறந்த அறிவினை மாணவர்களுக்கு வழங்கும் பொருட்டு பள்ளிக்கூடங்களில் கற்பிக்கப்படுகிறது. சீனாவைச் சேர்ந்த சிங்குவா பல்கலைக்கழகத்தின் துணை அமைப்பான UNIS இனால் இலங்கையில் மின் - கல்வி கருத்திட்டம் நடைமுறையாக்கம் செய்யப்படுவதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளது. UNIS ஆனது 09 மாவட்டங்களில் மின் - கல்வி நிலையங்களை தாபிக்கவும் அவற்றின் பிரதான நிலையத்தை கொழும்பில் தாபிக்கவும் பிரேரித்துள்ளது. 

அதனடிப்படையில் குறித்த அமைச்சுடன் இணைந்து இவ்வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்கு விஞ்ஞான, தொழில்நுட்பவியல் மற்றும் ஆராய்ச்சி அமைச்சர் கௌரவ சுசில் பிரேமஜயந்த அவர்களினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

சுற்றுலா ஊக்குவிப்புச் சேவையொன்றாக கெழும்பிலுள்ள கால்வாய் வலைப்பின்னல் வழியே போக்குவரத்தை அறிமுகம் செய்தல் (விடய இல. 19)

இலங்கை காணி மீட்பு மற்றும் அபிவிருத்திக் கூட்டுத்தாபனம் சுமார் 43 கிலோ மீற்றர் தூரமுள்ள கொழும்பு கால்வாய் வலைப்பின்னலைப் பராமரிக்கின்றது. பல வருடங்களாக எந்த பயன்பாடும் இல்லாமல் வெறுமனே உள்ள கால்வாய் வலைப்பின்னலில் பொருட்களையும் ஆட்களையும் அதன் வளைவுப்பாதை வழியே கொண்டு செல்வதன் மூலம் அதன் உண்மையான சுறுசுறுப்பான நிலைமைக்குக் கொண்டுவர முடியும். இது போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் என்பதோடு குறைந்த செலவுப் போக்குவரத்து முறைமையை மக்களுக்கு வழங்கும். சுற்றுலாக் கைத்தொழில் துறையை மேம்படுத்துவதற்கு இலங்கை அரசினால் அழுத்தம் கொடுக்கப்பட்டிருப்பதற்கு ஏற்ப, கொழும்பில் உள்ள கால்வாய்கள் மற்றும் நீர் நிலைகள் என்பவற்றை படகுச் சவாரிகள் மற்றம் நீருடன் விளையாட்டுக்கள் மற்றும் கால்வாய் ஒதுக்கங்கள் வழியே மிதிவண்டி பிரயாணங்கள் என்பவற்றுடன் கூடிய பொழுதுபோக்குச் செயற்பாடுகளை வழங்கச் கூடியவாறு ஏற்பாடு செய்ய முடியும். மேலும் கால்வாய்களில் நீருடன் தொடர்புடைய செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களுக்காகவும் சுற்றுலா செயற்பாடுகளை ஊக்குவிப்பதற்காகவும் மிதக்கும் உணவகங்கள் மற்றும் கூடாரங்களை அமைப்பது பயன் வாய்ந்ததாக அமையும். 

மேற்கூறப்பட்ட திட்டங்களை இலங்கை காணி மீட்பு மற்றும் அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின் மூலம் நடைமுறைப்படுத்த மாநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் கௌரவ பாடலி சம்பிக ரணவக அவர்களினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அரச வெசாக் உற்சவம் - 2016   (விடய இல. 22)

2016 ஆம் ஆண்டிக் அரச வெசாக் உற்சவம், தென் மாகாணத்தின் அம்பாந்தோட்டை மாவட்டத்தின் வீரகெட்டிய பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நைகலை ரஜமஹா விகாரையில் நடாத்துவதற்கு புத்தசாசன அமைச்சர் கௌரவ கலாநிதி விஜயதாச ராஜபக்ஷவினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

மரந்தகஹமுல களஞ்சியசாலைத் தொகுதியை நெல் சந்தைப்படுத்தல் சபையிடம் ஒப்படைத்தல் (விடய இல. 23)

2014 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட அமைச்சரவை முடிவின் படி இலங்கை ரெச பொறியியல் கூட்டுத்தாபனம் 372 மில்லியன் ரூபா செலவில் இந்த களஞ்சியசாலைத் தொகுதி நிர்மாணித்துள்ளது. களஞ்சியசாலைத் தொகுதி அமைந்துள்ள காணி மரந்தகஹமுல கிராமத்தில் அமைந்துள்ளதுடன் அது திவுலபிட்டிய பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட செலேபிட்டிமுல்ல கிராம உத்தியோகத்தர் பிரிவுக்குட்பட்டதாகும். 61,000 அடி பரப்பைக் கொண்ட குறித்த களஞ்சியசாலைத் தொகுதி 110 அறைகளை கொண்டமைந்துள்ளதுடன் இதுவரை சரியான முறையில் முறையான எவ்வித அதிகார சபைக்கும் கீழ் கொண்டு வரப்படாத நிலையில் முன்னெடுக்கப்படுகின்றது. அரசாங்கத்தின் நெல் கொள்வனவுத் திட்டத்திற்காக குறித்த களஞ்சியசாலையை நெல் சந்தைப்படுத்தும் சபைக்கு உரிமை மாற்றம் செய்து கொடுப்பது தொடர்பில் கிராமிய பொருளாதாரம் பற்றிய அமைச்சர் கௌரவ பீ. ஹரிசனினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

தேசிய கால்நடை அபிவிருத்திச் சபையின் கீழுள்ள சிறின்கபாத பண்ணையின் நிலப்பகுதியின் ஒரு பகுதியை வரையறுக்கப்பட்ட மில்கோ (தனியார்) நிறுவனத்திற்கு மாற்றீடு செய்தல் (விடய இல. 24)

கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சின் கால்நடை வள பிரிவின் கீழ் உள்ள அனைத்து பங்குகளையும் பொதுத் திறைசேரியினால் உடைமையாகக் கொண்டுள்ள வரையறுக்கப்பட்ட மில்கோ (தனியார்) நிறுவனமானது பால் தொடர்பான உற்பத்திப் பொருட்களை உற்பத்தி செய்கின்ற ஒரே ஒரு அரச நிறுவனமாகும். 

நாரஹேன்பிடியவில் உள்ள பழைய தொழிற்சாலையை தேசிய கால்நடை வள அபிவிருத்திச் சபையின் கீழுள்ள படல்கம பகுதியில் அமைந்துள்ள சிறின்கபாத பண்ணையின் பெரும் பகுதியில் அமைப்பதற்காக குறித்த காணியை மாற்றீடு செய்வதற்கு கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சர் பி. ஹரிசன் அவர்களினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

கொமும்பு துறைமுகத்தை விஸ்தரிக்கும் வேலைத்திட்டம் - கிழக்கு கொள்கலன் முனையத்தில் அபிவிருத்தி மற்றும் மாற்றீட்டு செயற்பாடுகள்  (விடய இல. 34)

கொழும்பு துறைமுகத்தை விஸ்திரிக்கும் வேலைத்திட்டத்தில் இரண்டாவது ஆழமான செயற்திட்டமாக கிழக்கு முனையகத்தின் அபிவிருத்தி திட்டம் நோக்கப்படுகின்றது. இலங்கை துறைமுக அதிகார சபைக்கு குறித்த பகுதியின் 51 சதவீத உரித்தை வழங்குவதுடன் ஏனைய செயற்திட்டங்களை கப்பல் கம்பனி ஒன்றுக்கு அல்லது தனியார் கொள்கலன் முனைய செயற்பாட்டாளர்களுடன் இணைந்து இவ்வேலைத்திட்டத்தை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

இவ்வேலைத்திட்டத்தின் ஆலோசக சேவையினை ஆசிய அபிவிருத்தி வங்கிக்கு வழங்குவதற்கும், குறித்த வேலைத்திட்டத்திற்கு ஆலோசனைகளையும், கருத்துக்களையும் பெற்றுக் கொள்வதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்வதற்கும் துறைமுக மற்றும் கடற்றொழில் அமைச்சர் கௌரவ அர்ஜுன ரணதுங்கவினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

கம்பஹா, அத்தனகல்ல மற்றும் மினுவங்கொட இணைந்த நீர் வழங்கல் திட்டம்  (விடய இல. 35)

கம்பஹா, அத்தனகல்ல மற்றும் மினுவங்கொட ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளையும் மீரிகம பிரதேச செயலகப் பிரிவின் ஒரு பகுதியையும் உள்ளடக்கக் கூடிய விதமாக பாதுகாப்பானதும் நம்பகரமானதுமான குடிநீரை வழங்குவது இந்தப் கருத்திட்டத்தின் நோக்கமாகும். இந்தக் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் சுமார் 300,000 மக்களுக்கு புதிதாக குடிநீர் வசதிகளை வழங்கக் கூடியதாக இருக்கின்ற அதேவேளையில், சுமார் 100,000 மக்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள குடிநீர் வசதிகளின் சேவையளவும் வளர்ச்சியடையும். சீன அபிவிருத்தி வங்கி இந்தக் கருத்திட்டத்தின் செலவில் 85 சதவீதத்தை வழங்குவதற்கு முன்வந்துள்ளது. எனவே அது குறித்த உடன்படிக்கையில் குறித்த வங்கியுடன் கைச்சாத்திட நிதி அமைச்சர் கௌரவ ரவி கருணாநாயக்க  அவர்களினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.  

சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சித்துறை அபிவிருத்தி ஒத்துழைப்புக்காக இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் அரசாங்கம் மற்றும் ஜேர்மன் குடியரசின் சிறிய மற்றும் நடுத்தர அளவு வர்த்தகத்துக்கான ஜேர்மன் சம்மேளனம் ஆகியவற்றுக்கிடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை (விடய இல. 36)

இந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சி, பிராந்திய அபிவிருத்தி, தொழிலுருவாக்கம் மற்றம் வறுமை ஒழிப்பு ஆகியவற்றுக்குப் பங்களிப்புச் செய்யும் வகையில் கிட்டத்தட்ட 45 சதவீத தொழில் வாய்ப்புக்கள் மற்றும் 50 சதவீத மொத்த தேசிய உற்பத்தி ஆகியவற்றில் செல்வாக்குத் செலுத்துவதனால், சிறிய மற்றும் நடுத்தரத் தொழில் முயற்சிகள் துறையானது அபிவிருத்தி செய்யப்பட வேண்டிய முக்கிய துறையொன்றாக இந்த அரசாங்கத்தினால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் ஜனாதிபதியின் ஜேர்மன் விஜயத்தின் போது சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சித்துறை அபிவிருத்தி ஒத்துழைப்புக்காக இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் அரசாங்கம் மற்றும் ஜேர்மன் குடியரசின் சிறிய மற்றும் நடுத்தர அளவு வர்த்தகத்துக்கான ஜேர்மன் சம்மேளனம் ஆகியவற்றுக்கிடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திட கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சர் கௌரவ றிஷாட் பதியூதீனினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் அரசாங்கத்தின் உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சிற்கும் ஜேர்மன் ஐக்கிய குடியரசின் ர்நனைநடடிநசப பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ள தெற்காசிய நிறுவனம் மற்றும் னுயுயுனு இற்குமிடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கைகள்  (விடய இல. 36)

இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் மேற்கொள்ளவிருக்கும் ஜேர்மன் விஜயத்தின் போது இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் அரசாங்கத்தின் உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சிற்கும் ஜேர்மன் ஐக்கிய குடியரசின் ர்நனைநடடிநசப பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ள தெற்காசிய நிறுவனம் மற்றும் னுயுயுனு இற்குமிடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கைகள் இரண்டில் கைச்சாத்திட உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் கௌரவ லக்ஷ்மன் கிரியெல்லவினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இலங்கை மற்றும் ஜேர்மன் குடியரசிற்கிடையே விளையாட்டின் மேம்பாட்டிற்காக புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடல்  (விடய இல. 41)

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசு மற்றும் ஜேர்மன் குடியரசிற்கிடையே விளையாட்டுத்துறை ஒத்துழைப்பினை உறுதிப்படுத்தும் வகையில் இரு தரப்பு உடன்படிக்கை கைச்சாத்திட எதிர்பார்க்கப்படுகின்றது. 

இருநாடுகளுக்குமிடையில் விளையாட்டு, விளையாட்டு நிர்வாகம், விளையாட்டு பரீசீலனை, விளையாட்டு அபிவிருத்தி மற்றும் விளையாட்டின் மேம்பாட்டை விருத்தி செய்யும் வகையில் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு தேவையான புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திடும் நோக்கில் விளையாட்டுத் துறை அமைச்சர் கௌரவ தயாசிறி ஜயசேகர  அவர்களினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இறக்குமதி செய்யப்படும் அரிசிக்கான தீர்வை விரயைத் திருத்துதல்  (விடய இல. 43)

முன்வரும் 2015/2016 பெரும் போகத்தில் கிடைக்கவிருக்கும் உள்நாட்டு நெல் உற்பத்தியைக் oகவனத்திலெடுத்து உள்நாட்டு விவசாயிகளுக்கு பாதுகாப்புக் கிடைக்கக் கூடிய விதத்தில், இறக்குமதி செய்யப்படும் அரிசிக்காக கி.கிராம் ஒன்றுக்கு ரூபா 35 ஆகக் காணப்படும் தீர்வை வரியை 2016.02.01 ஆம் திகதி முதல் செயல்வலுப்பெறும் விதமாக கி.கிராம் ஒன்றுக்கு ரூபா 50 ஆக அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அது தொடர்பில் வருமானப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட 2016.02.01 ஆம் திகதிய 1952/10 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலுக்கு பாராளுமன்றத்தின் அங்கீகாரத்தை பெறுவதற்காக நிதியமைச்சர் கௌரவ ரவி கருணாநாயக்கவினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.