குருணாகல, தம்புள்ள - முக்கலன பகுதியில் நேற்று (7) இரவு இடம்பெற்ற பேருந்து விபத்தொன்றில் 25 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அரசுக்குச் சொந்தமான பேருந்து ஒன்றும் டிப்பர் வாகனம் ஒன்றும் மோதிக்கொண்டதிலேயே இவ்விபத்து சம்பவித்துள்ளது.

இதில், பேருந்து சாரதி உட்பட, பேருந்தில் பயணித்தவர்களே காயங்களுக்கு ஆளாகியுள்ளனர்.

இவர்கள், குருணாகல மற்றும் பொல்கொல்ல மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் இருவரது உடல் நிலை தீவிரமாக இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

விபத்துக்கான காரணம் குறித்து குருணாகல பொலிஸார் ஆராய்ந்து வருகிறார்கள்.