ஸ்ரீமா பண்டாரநாயக்கவினுடைய  குடியுரிமையை நீக்கியதைப் போன்று அவ்வளவு இலகுவாக என்னுடைய குடியுரிமையை நீக்க முடியாது. முடிந்தால் என்னுடைய குடியுரிமையை நீக்கிக் காட்டுமாறு ரணிலுக்கு நான் பகிரங்க சவால் விடுகின்றேன் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

கண்டியில் நேற்று செவ்வாய்க்கிழமை  இடம்பெற்ற தேர்தல் பிரசார கூடத்தின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். . 

உள்நாட்டில் பாரிய ஊழல் மோசடிகள் இடம்பெற்றுள்ளன. ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்கள் நன்றாகத்தான் இருக்கின்றனர். ஆனால் மத்திய வங்கியில் கொள்ளையிடப்பட்ட பணத்தை மீளப் பெறும் சுமை மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ளது. இதற்காக அரச ஊழியர்களின் ஓய்வூதியத்தையும் குறைத்துவிட்டனர். 

நாட்டின் அரசியலை மாற்றியமைக்கப் போகும் உங்களது வாக்குகள் பிரதேச சபை , நகர சபை என்பவற்றை மாற்றியமைப்பதாகவும் நகரத்தை அழகு படுத்துவதாகவும் மாத்திரம் அமையப் போவதில்லை. நாடு இரண்டாக பிளவடைவதிலிருந்த பாதகாப்பதாக உங்களது வாக்ககுகள் அமையப்பபோகின்றன. எனவே அதற்காக உங்களது வாக்குகளைப் பயன்படுத்துங்கள் என்றார்.