வவுனியாவில் இன்று காலை 10.30 மணியளவில் 15 ற்கும் மேற்பட்ட கைக்குண்டுகளை பூவரசங்குளம் பொலிசார் மீட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

வவுனியா பம்பைமடுப் பகுதியில் முன்னர் இராணுவத்தினரின் சோதனை நிலையமாக பயன்படுத்தப்பட்ட தனியார் காணி ஒன்றிலிருந்தே குறித்த கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன. 

காணியின் உரிமையாளரால் பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து, இன்று காலை அங்கு சென்ற பூவரசங்குளம் பொலிசார் அதனை மீட்டெத்துச் சென்றுள்ளதாக தெரிவித்துள்ளனர்.