ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் அமைச்சருமான மலிக் சமரவிக்ரம மீது ஊழல் குற்றச்சாட்டு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த குற்றச்சாட்டை கோட்டேயின் முன்னாள் நகர பிதா ஜானக ரணவக்க பதிவுசெய்துள்ளார்.

சமரவிக்ரம, அரசுக்குச் சொந்தமான காணிகளை முறைகேடாகப் பயன்படுத்தி அரசுக்கு நட்டத்தை ஏற்படுத்தியிருப்பதாகவே அக்குற்றச்சாட்டில் ஜானக ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.