‘எப்போது திருமணம்’ என்று கேள்வி கேட்டு நச்சரித்த கர்ப்பிணிப் பெண்ணை 28 வயது நபர் கொலை செய்த சம்பவம் இந்தோனேசியாவின் கம்ப்புங் பசிர் ஜோங் என்ற பகுதியில் இடம்பெற்றுள்ளது.

நூர்தீன் என்ற அந்த நபர் திருமணமாகாதவர். அவரது அயல்வீட்டுப் பெண் ஒரு கர்ப்பிணி. அவர் நூர்தீனைக் காணும்போதெல்லாம், எப்போது திருமணம் செய்துகொள்ளப் போகிறாய் என்று கேட்பதை வழக்கமாக வைத்திருந்தார்.

தொடர்ச்சியாக இதே கேள்வியைக் கேட்டுக் குடைந்த கர்ப்பிணிப் பெண்ணின் தொந்தரவால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான நூர்தீன், நேரே அந்தப் பெண்ணின் வீட்டுக்குச் சென்று கழுத்தை நெரித்துக் கொலை செய்தார்.

பின்னர், அங்கிருந்த பணம் மற்றும் அந்தப் பெண்ணின் கைபேசியையும் திருடிச் சென்றார். எனினும் அவர் தலைமறைவாவதற்குள் பொலிஸார் அவரது காலில் துப்பாக்கியால் சுட்டுவீழ்த்திக் கைது செய்தனர்.

ஆயுட்காலச் சிறையை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார் நூர்தீன்!