பொது இடங்களில் நிக்காப் மற்றும் பர்தா போன்ற முகத்தை மறைக்கும் ஆடைகளைத் தடை செய்ய டென்மார்க் அரசு ஆலோசனை செய்து வருகிறது.

இதை அறிவித்த அந்நாட்டின் நீதியமைச்சர், டென்மார்க் வழக்கப்படி இரண்டு பேர் நேருக்கு நேர் சந்தித்துக்கொள்ளும்போது, ஒருவர் தனது முகத்தை மறைத்திருப்பது மற்றவரை அவமதிக்கும் செயல் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இத்தடையை அமுல்படுத்துவதன் மூலம், டென்மார்க்கில் ஒருவருக்கொருவர் நம்பிக்கையும் மரியாதையும் செலுத்துவதை உறுதிசெய்ய முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாலோசனை மனித உரிமைகள் குறித்து ஆராயும் அரசு சார்பற்ற நிறுவனம் ஒன்றின் பார்வைக்கு அனுப்பப்பட்டுள்ளதுடன், அதன் கருத்துக்களையும் உள்ளடக்கிய ஒரு பரிந்துரையை அந்நாட்டின் குளிர்கால பாராளுமன்ற அமர்வில் சமர்ப்பிக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது.