தாய்லாந்தை சேர்ந்த புத்த துறவி ஒருவர் பெண்களின் உள்ளாடைகளை திருடி செல்வது சி.சி.டீவி கமெராவில் பதிவாகி பரபரப்பையும் ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தாய்லாந்த் Suphaburi பகுதியில் வசித்து வருபவரின் வீட்டில் பெண்களின் உள்ளாடைகள் தொடர்ந்து காணாமல் போயுள்ளது.

இதனால் இதனை திருடுவது யார்? என்பதை கண்டுபிடிக்க துணிகளை காயப்போடும் இடத்தில் சி.சி.டீவி கமெரா  பொறுத்தியுள்ளனர்.

பதிவான சி.சி.டீவி காட்சியில் புத்த துறவி ஒருவர் உள்ளாடைகளை திருடி செல்வதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். அந்த துறவியின் பெயரை கண்டுபிடித்து அவருடன் இருக்கும் துறவிகளிடன் இதை பற்றி கேட்டுள்ளனர்.

அப்போது அவருக்கு உடல் மற்றும் மனதளவில் பிரச்சனைகள் இருப்பதாகவும் இதற்காக மாத்திரைகள் சாப்பிட்டு வந்ததாகவும் தற்போது அதை நிறுத்திவிட்டதால் இதுபோன்று வித்தியசமாக செயல்படுவதாக தெரிவித்துள்ளனர்.