பங்களாதேஷ் அணிக்கெதிரான இரபதுக்கு - 20 தொடரில் விளையாடவுள்ள இலங்கை அணிக்கு டினேஷ் சந்திமால் தலைமை தாங்கவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.

பங்களாதேஷுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி அவ்வணிக்கு எதிராக 2 இருபதுக்கு - 20 போட்டித் தொடரில் விளையாடவுள்ளது.

இந்நிலையில் பங்களாதேஷ் அணிக்கு எதிராக விளையாடவுள்ள இலங்கை குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதலாவது இருபதுக்கு - 20 போட்டி எதிர்வரும் 15 ஆம் திகதியும் 2 ஆவது இருபதுக்கு - 20 போட்டி எதிர்வரும் 18 ஆம் திகதியும் இடம்பெறவுள்ளது.

விளையாட்டுத்துறை அமைச்சர் அனுமதியளித்துள்ள இலங்கை குழாமில் இடம்பெற்றுள்ள வீரர்களின் விபரங்கள் வருமாறு,

டினேஷ் சந்திமல் ( அணித் தலைவர் ), உபுல் தரங்க , தனுஷ்க குணதிலக, குஷல் ஜனித் பெரேரா, திஸர பெரேரா, அசேல குணரத்ன, நிரோஷன் டிக்வெல்ல, தசுன் சானக்க, இசுரு உதான, ஷேன் மதுசங்க, ஜெப்ரி வெண்டர்ஷா, அகில தனஞ்சய, அமில அபென்சோ, ஜீவன் மெண்டிஸ், அசித பெர்னாண்டோ ஆகியோர் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.