இந்தோனேஷியாவில் கடந்த சில நாட்களாகப் பெய்துவரும் அடை மழை காரணமாக 6,500 பேர் இடம்பெயர்ந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்தோனேஷியாவில்  கடந்த சில நாட்களாக தொடர்ந்து அடை மழை பெய்துவரும் நிலையில் போகோர்  நகரில் பாரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதுடன் அந்நகரில் நேற்றுமுன்தினம்  மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

இந்த மண்சரிவைத் தொடர்ந்து 8 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அவர்களைத் தேடும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அத்துடன் போகோர் நகரைச் சேர்ந்த மக்களின் இயல்பு வாழ்க்கை அடை மழை காரணமாக முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அஊடகங்கள் தெரிவிக்கின்றன.