யாழ்ப்பாணம், மாதகல் கடற்பரப்பில் தங்கக்கடத்தலில் ஈடுபட்ட இருவரை காங்கேசன்துறை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர்.

படகொன்றில் மிகவும் சூட்சுமமாக தங்கங்களை கடத்திச் செல்ல முற்படுகையிலேயே குறித்த இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடமிருந்து 3 கிலோ 700 கிராம் நிறையுடைய தங்கங்களை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

மாதகல் பகுதியில் இருந்து 11 கிலோ மீற்றர் கடல்மைல் தொலைவில் வைத்த நேற்றிரவு குறித்த இருவரும் தங்கத்துடன் கைதுசெய்யப்பட்டனர்.

கடற்படையினரால் கைதுசெய்யப்பட்ட இருவரும் தங்கங்களுடன் மேலதிக விசாரணைக்காக சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.