அம்பகமுவ பிரதே பையின் கிழ்  போட்டியிட்ட ஜக்கிய தேசிய சுதந்திர முன்னணியின் வாழைப்பழ சீப்பில் போட்டியிட்ட 8 வேட்பாளர்கள் நேற்று  தமிழ் முற்போக்கு கூட்டனியோடு இனைந்து கொண்டனர்.

கினிகத்தேன திலகாஸ் மண்டபத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் போட்டியிடுகின்ற தமிழ் முற்போக்கு கூட்டனியின் தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்று இடம் பெற்று கொண்டிருந்த வேளையிலேயே  8 குறித்த  வேட்பாளர்களும்  தமிழ் முற்போக்கு கூட்டனியோடு உத்தியோகபூர்வமாக இனைந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கபடுகிறது.

மலையக பெருந்தோட்ட மக்களுக்கு மேலும் பல அபிவிருத்தி திட்டங்களை முன்னேடுக்கும் நோக்கிலே  மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் அவர்களோடு இனைந்து மேலும் பல அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்க உள்ளதாக ஜக்கிய தேசிய சுதந்திர முன்னணியின் வழைப்பழ சீப்பில் போட்டியிட்ட 8 வேட்பாளர்களும் தெரிவித்துள்ளனர்.