ஹட்டன் - குடாஒயா, விநாயகர் புறம் பகுதியில் உள்ள இந்துமத ஆலய குறுக்களின் வீட்டினுல் நேற்று  மாலை உட்புகுந்த திருடனை பிரதேச மக்கள் மடக்கி பிடித்துள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர். 

இந்த சம்பவம் நேற்று மாலை  06.30 மணி அளவில் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த குறுக்கள் வீட்டில் கூரை பகுதியை கழற்றி கொண்டு உட்புகுந்த வேளை  வீட்டாரும் அயலவர்களும் குறித்த சந்தேக நபரை மடக்கி பிடித்து மரம் ஒன்றில் கயிற்றினால் கட்டி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பாக  ஹட்டன் பொலிஸாருக்கு தகவல் வழங்கபைட்டமைக்கு அமைய சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிஸார் குறித்த சந்தேக நபரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் .

கைது செய்யபட்ட சந்தேகநபர் ஹட்டன் குடாகம பகுதியை சேர்ந்த 20 வயதுடையவர் என  பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

கைது செய்யபட்ட சந்தேக நபர் இன்று ஹட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தபட உள்ளதாக ஹட்டன் பொலிஸார் மேலும் தெரிவித்தனர் .

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.