நானுஓயா - கிளாரண்டன் மேற்பிரிவு தோட்டத்தில் நேற்று  பிற்பகல் வேளையில்  கடும் காற்றுடன் கூடிய மழை பெய்ததால் அங்குள்ள 3 தொழிலாளர் குடியிருப்புக்கள் சேதமடைந்துள்ளன.

குறித்த குடியிருப்புக்களின் கூரைகள் காற்றில் அள்ளுண்டு போயுள்ளதாகவும் குடியிருப்புக்களில் இருந்த பொருட்கள் அனைத்தும் சேதமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாதிக்கப்பட்ட மூன்று குடும்பங்களை சேர்ந்த 16 பேர் தோட்டத்திலுள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கான நிவாரண உதவிகளை தோட்ட நிர்வாகம் செய்து வருவதோடு மாற்று நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றது.