இலங்கையின் 70 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மும்முனை கிரிக்கெட் தொடர் எதிர்வரும் மார்ச் மாதம் 6 ஆம் திகதி  ஆரம்பமாகவுள்ளது.

பங்களாதேஷ், இலங்கை மற்றும் இந்திய அணிகள் பங்கேற்கும் சுதந்திரக் இருபதுக்கு - 20 கிரிக்கெட் மும்முனைத் தொடர் கொழும்பில் இடம்பெறவுள்ளது.

மார்ச் மாதம் 6 ஆம் திகதி ஆரம்பமாகும் இந்த கிரிக்கெட் போட்டித்தொடர் 18 ஆம் திகதி வரை கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெறும்.

தொடரின் முதலாவது போட்டி இலங்கை - இந்திய அணிகளுக்கிடையில் மார்ச் மாதம் 6 ஆம் திகதி இடம்பெறும்.